எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாட்னா, டிச. 17 - மதச்சார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்து தேசம் துண்டாடப்படுவதை தடுக்க வேண்டும், நரேந்திர மோடியின் கனவு நனவாகாது என சிறையில் இருந்து விடுதலையான லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார். கால்நடைத் தீவன ஊழல் வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, அவர் சிறையில் இருந்து இன்று (திங்கள்கிழமை) விடுவிக்கப்பட்டார்.
முன்னதாக கடந்த வெள்ளியன்று லாலுவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இருப்பினும், உச்ச நீதிமன்ற உத்தரவு நகல்கள் விசாரணை நீதிமன்றத்துக்கு வராததால் அவர் விடுதலையாவதில் சிக்கல் நீடித்தது.
இந்நிலையில். இன்று , உச்ச நீதிமன்ற உத்தரவு நகல்கள் விசாரணை நீதிமன்றத்துக்கு வந்தடைந்தன. இதனையடுத்து, ஜாமீன் பத்திரம் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கைகள் முடிந்த பிறகு, லாலு பிரசாத் யாதல் பிர்ஸா முண்டா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
லாலு பேட்டி:
சிறையில் இருந்து வெளியே வந்த அவரை அங்கே கூடியிருந்த ராஷ்ட்ரீய ஜனதா தள தொண்டர்கள் வரவேற்றனர். அப்போது பேசிய லாலு, தனது நலன் விரும்பிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார். மேலும், ஊழலுக்கு எதிராக போராடும் சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவை கடுமையாக விமர்சித்த அவர், அண்ணா ஹசாரே சட்டத்திற்கும் மேல் ஒரு அமைப்பை உருவாக்க முயல்வதாக தெரிவித்தார்.
மதச்சார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்து தேசம் துண்டாடப்படுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனை வலியுறுத்தி நாடு முழுவதும் தான் பிரச்சார பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார். நரேந்திர மோடியின் கனவு நிறைவேறாது எனவும் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


