முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் செந்தில் மருத்துவமனையில் அனுமதி

சனிக்கிழமை, 21 மே 2011      சினிமா
Image Unavailable

சென்னை, மே.21 - பிரபல காமெடி நடிகர் செந்தில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிரிப்பு நடிகர் செந்தில் பல பிரபல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். சிரிப்பு நடிகர் கவுண்டமணியுடன் இவர் நடித்த காட்சிகள் பொதுமக்களிடையே பிரபலமானவை. இவர் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அரசியலிலும் செந்தில் ஈடுபாடு கொண்டவர். சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தமிழகமெங்கும் ஒரு மாதம் பிரச்சாரம் செய்தார். மூல நோயால் அவதிப்பட்ட செந்திலுக்கு நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் அமைந்தகரையில் உள்ள பில்ரோத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர் கண்ணன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்தனர். அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. தற்போது அவர் குணமாகி வருவதாகவும் ஓரிரு நாட்களில் பூரண குணமடைந்து வீட்டிற்கு வருவார் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony