முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முறைகேட்டை அம்பலப் படுத்தியவருக்கு பாதுகாப்பு வழங்க மனு

வெள்ளிக்கிழமை, 3 ஜனவரி 2014      ஊழல்
Image Unavailable

 

சென்னை.ஜன.4 - தாயநிதிமாறன் மீதான மோசடி வழக்கில் சம்மந்தப்பட்ட பி.எஸ்.என்.எல். முறைகேட்டை அம்பலப்படுத்தியவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் ராஜராமன், டிராபிக் ராமசாமி ஆகியோர் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:_

தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்தபோது தனது அதிகாரத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக 322 தொலைபேசி இணைப்புகளை பெற்று சன்டிவிக்கு பயன்படுத்தியதில் அரசுக்கு 440 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இந்த விவகாரத்தை அம்பலப்படுத்திய பி.எஸ்.என்.எல். துணை மண்டல பொறியாளர் மற்றும் அவரது சகாக்கல் மீது பி.எஸ்.என்.எல். நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அது பலிவாங்கும் நடவடிக்கையாகும்.

இந்த முறைகேடுகள் தொடர்பாக கடந்த ஆண்டு எப்ஐஆர் பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தை அம்பலப்படுத்திய சி.கே.மதிவாணன் ஓய்வு பெற்ற பின் அவருக்கு கிடைக்கவேண்டிய பணிபலன்கள், இதர சலுகைகளை வழங்காமல் இழுத்தடிக்கின்றனர் என்று ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு இருக்கிறது.

மதிவாணன் மீதான ஒழுங்கு நடவடிக்கையை தாக்கல் செய்ய பி.எஸ்.என்.எல். நிர்வாகத்துக்கு உத்தரவிடவேண்டும். மதிவாணன் மற்றும் அவரது சகாக்களுக்கு பாதுகாப்பு கேட்டு நாங்கள் தாக்கல் செய்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும். மத்திய அரசு செயலாளர் மற்றும் சிபிஐ டைரக்டருக்கு அந்த உத்தரவை தெரிவிக்கவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட் 2_வது பெஞ்ச் நீதிபதிகள் அக்னிகோத்ரி, கே.கே.சசிதரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதிகள் 2 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் மத்திய தொலை தொடர்புத்துறை செயலாளர், சிபிஐ இயக்குனர் ஆகியோருக்கு பிரைவேட் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago