நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் இருக்கிறார் நடிகர் தனுஷ் பேட்டி

Thanush

சென்னை, மே.- 23 -  நடிகர்  ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாக நடிகரும் மருகனுமான தனுஷ் கூறினார்.
நடிகர் ரஜினி உடல் நலக்குறைவால் கடந்த 13-ம் தேதி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர். அப்போது காய்ச்சல் இருந்தது. நுரையீரலில் nullநீர்கோர்ப்பும் காணப்பட்டது. சிறுnullநீரகத்தில் லேசான பாதிப்பு ஏற்பட்டு காலில் வீக்கமும் இருந்தது. இதையடுத்து ரஜினிக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை மேற்கொண்டனர். தனி அறையில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு ஆபரேஷன் மூலம் நுரையீரல் nullநீர்கோர்ப்பு அகற்றப்பட்டது. டயாலிசிஸ் சிகிச்சையும் செய்யப்பட்டது.
சிகிச்சைக்கு பின் ரஜினி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவர் இட்லி, வடை சாப்பிட்டதாகவும் கூறினர். ரஜினி நலம் பெற வேண்டி தமிழகம் முழுவதும் ரசிகர்கள் கோவில்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே ரஜினி உடல் நிலை குறித்து தவறான வதந்திகள் பரவி வருகின்றன.
இதற்கு பதில் அளித்து நடிகர் தனுஷ் பேட்டி அளித்துள்ளார் அவர் கூறியதாவது:​
ரஜினி நலமுடனும், தெம்புடனும் இருக்கிறார். விரைவில் nullரண குணமடைந்து திரும்புவார். அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவுகின்றன. அதனை ரசிகர்கள் யாரும் நம்ப வேண்டாம். ரஜினி நலம் பெற ரசிகர்கள் சிலர் தங்கள் உடலை வருத்தி வேண்டுதல் செய்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அவரவர் தங்களது வழக்கமான பணிகளில் ஈடுபடுமாறும் வேண்டிக் கொள்கிறேன்.
இவ்வாறு நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.
ரஜினியும், மகள் ஐஸ்வர்யாவும் பெருவிரலை உயர்த்தி காட்டுவது போன்ற படத்தையும் தனுஷ் தனது டுவிட்டர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.  முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்றார். ரஜினியின் உடல்நிலை குறித்து அவரது உதவியாளர் சுப்பையாவிடம் விசாரித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 26.10.2021 காற்று மணியின் ஓசைகளை கேட்டு குஷியான நாய்...! முதலையை தோளில் போட்டு குத்தாட்டம் | சிலிர்க்க வைக்கும் வீடியோ வைரல்...!
பார்வையாளர்ளை வியப்பில் ஆழ்த்திய பாம்பு நடனம்...! ஆமையின் கண்ணீரை பருகும் வண்ணத்துப்பூச்சிகள்...! ஒரே நாளில் தலையில் உள்ள பேனை விரட்ட எளிய டிப்ஸ்| How To Get Rid Of Head Lice Completely,
நெற்றியில் ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி...! இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 25.10.2021 இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 24.10.2021
ஹோம் வொர்க் பண்ணினா பூனைக்கு பிடிக்காது சிறுவனை டிஸ்டர்ப் செய்யும் வீடியோ வைரல்....! கீழே கிடக்கும் குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடும் யானை... Vaara Rasi Palan - 25.10.2021 to 31.10.2021 | Weekly rasi palan Tamil | வார ராசிபலன்