பின்லேடனை கொன்றதற்கு பழிக்கு பழி வாங்கப்போவதாக அல் குவைதா தலைவர் மிரட்டல்

aif-al-adel

லண்டன், மே.- 23 - ஒசாமா பின்லேடனை சுட்டுக்கொன்றதற்கு  பழிக்கு  பழி வாங்கப்போவதாக அல் குவைதா இயக்கத்தின் புதிய தலைவர்  சைப்  அல்  ஆடேல் மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் இரட்டை கோபுரம்,  வாஷிங்டன் ராணுவ  தலைமையகம் ஆகியவற்றின் மீது தீவிரவாதிகள் கடந்த 2001 ம் ஆண்டு  நடத்திய  தாக்குதலுக்கு மூளையாக  செயல்பட்ட அல் குவைதா தலைவர் ஒசாமா பின்லேடன் கடந்த மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் என்ற இடத்தில் பதுங்கி இருந்த போது  அமெரிக்க அதிரடிப்படை  வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதை அடுத்து அல்  குவைதா  இயக்கத்தின் புதிய  தலைவராக சைப் அல் ஆடேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ