முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலீதா மீதான ஊழல் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

செவ்வாய்க்கிழமை, 18 பெப்ரவரி 2014      ஊழல்
Image Unavailable

 

டாக்கா,பிப்.19 -  வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மீதான இரு ஊழல் வழக்குகளில், குற்றச்சாட்டுகள் பதிவு செய்வது தொடர்பான விசாரணையை நீதிமன்றம் வரும் மார்ச் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

ஜியா ஆதரவற்றோர் அறக்கட்டளை என்ற பெயரில் போலி அமைப்பை ஏற்படுத்தி சுமார் ரூ.1 கோடியே 67 லட்சம் சொத்து சேர்த்ததாக, கலீதா ஜியா, அவரது மகனும் வங்கதேச தேசிய கட்சியின் மூத்த துணைத் தலைவருமான தாரிக் ரஹ்மான் மற்றும் 4 பேர் மீது வங்கதேச ஊழல் எதிர்ப்பு ஆணையம் கடந்த 2009ம் ஆண்டு ஜூலை மாதம் வழக்குப் பதிவு செய்தது.

இதுபோல கலீதா தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி ஜியா அறக்கட்டளையை ஏற்படுத்தியதாக, கலீதா மற்றும் 3 பேர் மீது ஊழல் எதிர்ப்பு ஆணையம் கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மற்றொரு வழக்கை பதிவு செய்தது.

இவ்வழக்குகளில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்வது தொடர்பான விசாரணை நேற்று நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது கலீதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “உடல் நலக்குறைவு காரணமாக கலீதா நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை. குற்றச்சாட்டுகள் முறைப்படி பதிவு செய்யப் படவேண்டும் என்பதால் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்” என்றார்.

இதற்கு அரசுத் தரப்பு வழக் றிஞர் ஆட்சேபம் தெரிவித்தார். “கலீதா ஆஜராகாவிட்டாலும் விசாரணையை தொடரலாம்” என்றார் அவர். எனினும் வழக்கு விசாரணையை மார்ச் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதன் மூலம் ஜியா ஆதரவற்றோர் அறக்கட்டளை ஊழல் வழக்கு 19-வது முறையாகவும், ஜியா அறக்கட்டளை ஊழல் வழக்கு 10-வது முறையாகவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis