முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் ரஜிகாந்த்க்கு சிங்கபூரில் சிகிச்சை

சனிக்கிழமை, 28 மே 2011      சினிமா
Image Unavailable

சென்னை, மே. - 28 - நடிகர் ரஜிகாந்த்  சிங்கபூருக்கு  சிகிச்சைக்காக செல்கிறார் என்று அவரது மனை லதா ரஜினிகாந்த் தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். தொடக்கத்தில் மயிலாப்nullர் இசபெல்லா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். கடந்த 13​ந்தேதி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். அங்கு மருத்துவக் குழுவினர் நவீன சிகிச்சை அளித்து வருகின்றனர். அமெரிக்கா டாக்டர்களும் வந்து சிகிச்சை அளித்தனர். சிறுnullரக பாதிப்பு இருந்ததால் டயாலிசிஸ் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் ரஜினியை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று நவீன சிகிச்சை அளிக்க குடும்பத்தினர் விரும்பினர். லண்டனுக்கு அழைத்து செல்ல திட்டமிட்டனர். ஆனால் அங்கு செல்வதற்கு nullண்ட நேரம் ஆகும் என்றும் ரஜினி உடல் நிலை அதற்கு ஒத்துக்கொள்ளாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 4 மணி நேரம் பயண தூரம் உள்ள சிங்கப்nullருக்கு அழைத்து செல்ல முடிவு செய்துள் ளனர். உட்கார்ந்து பயணம் செய்யும் அளவுக்கு ரஜினியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். நேற்று இரவு முதல் பயண ஏற்பாடுகள் துரிதமாக நடக்கின்றன. சிங்கப்nullர் ஏர்லைன்ஸ் விமானத்தில் செல்ல டிக்கெட் பதிவு செய்யப்பட்டு உள்ளது. வீல் சேர் பயணியாக ரஜினி செல்வதற்கு அனுமதி வாங்கப்பட்டு உள்ளது. சிவாஜிராவ் என்ற பெயரிலான தனது பாஸ்போர்ட்டில் ரஜினி பயணப்படுகிறார். அவருடன் ரஜினி மனைவி லதா மகள் ஐஸ்வர்யா ஆகியோரும் செல்கின்றனர். போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு ரஜினியை ஆம்புலன்ஸ் வேனில் வைத்து அழைத்து செல்கின்றனர். விமான படிக்கட்டு வரை ஆம்புலன்சை கொண்டு செல்ல அனுமதி பெறும் முயற்சியில் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். சிங்கப்nullரில் உள்ள நேஷனல் கிட்னி பவுண்டேஷன் மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட உள்ளார். அமெரிக்க டாக்டர்களும் அங்கு வருகின்றனர். ரஜினிக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் உப்பு சத்து. பொட்டாசிய சத்து மற்றும் கிரியேட்டின் அளவுகள் அதிகமாக இருந்தன. இதன் மூலம் அவரது சிறுnullரகத் தின் செயல்பாடு பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. சிறுnullரக பாதிப்பினால் ரத்தத்தில் ஹீமோ குளோபின் அளவை தீர்மானிக்கும் எரித்ரோ பாய்ட்டின் ஹார்மோன் உற்பத்தியில் பிரச்சினை ஏற்பட்டது. இதனை குணமாக்க சிங்கப்nullர் ஆஸ்பத்திரியில் நவீன சிகிச்சை அளிக்கப்பட உள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்