முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறையில் படுக்கை வசதி இல்லாததால் குண்டு மனிதர் விடுதலை

சனிக்கிழமை, 29 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

லண்டன், மார்ச் 30 - சிறையில் சரியான படுக்கை அறை வசதி இல்லாததால், 7 அடி குண்டு மனிதர் ஒருவர் விடுதலை செய்யப்பட்டார்.  லண்டனை சேர்ந்தவர் ஜூட் மெட்கால்ப். இவர் கிளின் பெல்டார்  என்ற உடல் பருமன் நோயால் அவதிப்பட்டு வருகிறார். இந்த நிலையில் இவர் ஒரு வீ்ட்டில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளயடிக்க முயன்றார். அப்போது பிடிபட்ட இவர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். 

பின்னர் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இவர் ஒரு வருடம் சமூக சேவை செய்ய வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இவர் லண்டனில் உள்ள ஒரு சிறையில்  அடைக்கப்பட்டார். மிகக் குண்டு மனிதரான இவர் உயரம் 7 அடி. எனவே இவருக்கு சிறையில் போதிய வசதி செய்து கொடுக்க முடியவில்லை, 

மிக உயரமான இவரது உயரத்துக்கு ஏற்ப வசதி செய்து கொடுக்க முடியவில்லை. சிறையில் உள்ள அறையும் மிகக் குறுகலாக உள்ளது. இதனால் இவரை சிறை அதிகாரிகளால் பராமரிக்க முடியவில்லை. இதுபற்றி கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இவரது உயரத்துக்கு ஏற்ப கைதிகளுக்கன சீருடை கொடுக்க முடியவில்லை. படுக்கை  வசதியும் இல்லை. 

மேலும் இவர் உடல் பருமன் நோயால்  அவதிப்படுகிறார். எ னவே இவரை உடனடியாக விடுதலை செய்து வீட்டுக்கு அனுப்புமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இவரது கோரிக்கைகளை பரிசீலித்த நீதிபதி இவரை விடுதலை செய்தார். இவர் ஏற்கெனவே 75 நாள்கள் சிறைத்தண்டனை அனுபவித்துள்ளார்.              

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago