Idhayam Matrimony

தயாநிதி மாறனை டிஸ்மிஸ் செய்யுங்கள்: பா.ஜ.க.

சனிக்கிழமை, 4 ஜூன் 2011      ஊழல்
Image Unavailable

 

லக்னோ,ஜூன்.5 - முறைகேடு புகாருக்கு ஆளாகி உள்ள மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் பதவி விலகாவிட்டால் அவரை பிரதமர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பா.ஜ.க வலியுறுத்தி உள்ளது.  பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டம் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவ்டேகர் நிருபர்களிடம் கூறியதாவது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள முறைகேடு புகாருக்கு ஆளான அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்துக்கு அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர் தொலைத் தொடர்பு துறை அமைச்சராக இருந்த போது இந்த முறைகேடு நடந்துள்ளது. எனவே அவர் உடனடியாக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் மன்மோகன்சிங் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago