மும்பை தாக்குதலில் தொடர்புடைய அல்கொய்தா தீவிரவாதி பலி

சனிக்கிழமை, 4 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

இஸ்லாமாபாத், மே.5 - பாகிஸ்தானில் அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலில் மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவனாக சந்தேகிக்கப்படும் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தோடு தொடர்புடையை பயங்கரவாதி இலியாஸ் உள்பட 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தகவலை பி.பி.சி.வானொலி தெரிவித்துள்ளது. 

தெற்கு வஜிரிஸ்தான் பகுதியில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான வானாவில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமெரிக்கா இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தியதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். சிறிய இடைவெளிவிட்டு இரண்டு ஏவுகணைகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதில் அல்கொய்தா தீவிரவாதி இலியாஸ் உள்பட 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக உள்ளூர்வாசிகள் உறுதிப்படுத்தியுள்ளன. மேலும் 3 பேர் இத்தாக்குதலில் காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலை அரசு அதிகாரி ஒருவர் பெஷாவரில் உறுதி செய்தார். கொல்லப்பட்ட தீவிரவாதிகள் அனைவரும் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த தாலிபான்கள் என்று தெரிவித்தனர். பாகிஸ்தானில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை அமெரிக்க படைகள் அழித்து வருகின்றன. சமீபத்தில் சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனும் கொல்லப்பட்டான். அதைத்தொடர்ந்து அமெரிக்காவின் நடவடிக்கைகள் இடைவிடாது நடந்து வருகிறது. நேற்று நடந்த தாக்குதலில் தீவிரவாதி பலியானது பற்றி பாகிஸ்தான் பிரதமரிடம் கேட்டபோது தற்போது எனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று கூறி அவர் மழுப்பினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்: