வங்கி வட்டியில் மாற்றம் இருக்காது - அலுவாலியா தகவல்

சனிக்கிழமை, 4 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

சென்னை,ஜூன்.5 - வங்கி வட்டியில் மாற்றம் இருக்காது என்று திட்டக்குழு துணைத் தலைவர் மான்டெக்சிங் அலுவாலியா கூறினார்.இந்திய திட்டக்குழு துணைத்தலைவர் மான்டெக்சிங் அலுவாலியா டெல்லியில் இருந்து விமானத்தில் நேற்று பகல் 12 மணிக்கு சென்னை வந்தார். அவர் விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் கூறும் போது; நாட்டில் பணவீக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் வங்கி கடனுக்கான வட்டி வகிதம் உயர்த்தப்படுமா?

தற்போது பணவீக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. வெகுவிரைவில் பணவீக்கம் கட்டுக்குள் வந்துவிடும். எனவே வட்டி விகித்தில் மாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்படாது. 

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள மாற்றமாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தின் வளர்ச்சி பணி, திட்டப்பணி எப்படி உள்ளது? இந்திய அளவில் ஒப்பிடும்போது மற்ற மாநிலங்களை விட தமிழகத்தை பொருத்தவரையில் கடந்த 5 ஆண்டுகளில் வளர்ச்சி பணியும், திட்டப்பணியும் சிறப்பாக நடைபெற்றது. அதற்காக தமிழகத்தை பாராட்டுகிறேன். 

5 மாநிலங்களில் புதிய அரசுகள் பொறுப்பு ஏற்றுள்ளன. அந்த மாநில வளர்ச்சி பணிகளுக்கு நிதி எவ்வளவு ஒதுக்கப்போகிறீர்கள்?

புதிதாக பொறுப்பேற்றுள்ள மாநில அரசு நிர்வாகிகளை அழைத்து ஒரு குறிப்பிட்ட தேதியில் நாங்கள் பேசுவோம். அப்போது அந்தந்த மாநிலங்களில் என்ன புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது என்பதை கேட்டறிவோம். அதன் பிறகு அந்தந்த மாநிலங்களின் வளர்ச்சியின் தேவைக்கு ஏற்ப நிதிஒதுக்குவது பற்றி முடிவு செய்யப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: