முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானாவில் 1ம் தேதி ரயில் மறியல் போராட்டம் - சந்திரசேகரராவ்

சனிக்கிழமை, 26 பெப்ரவரி 2011      அரசியல்
Image Unavailable

 

நகரி, பிப்.27 - தெலுங்கானாவில் தனி மாநிலம் கோரி வருகிற 1ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று சந்திரசேகரராவ் தெரிவித்தார். ஆந்திராவை பிரித்து தநிமாநிலம் அமைக்க கோரி தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழு போராட்டம் நடத்தி வருகிறது. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் அமைப்பது குறித்து ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி ஆய்வு செய்து தாக்கல் செய்திருந்ததில் 6 அம்ச பரிந்துரைகள் இடம் பெற்றிருந்தது. ஆனால் தனி மாநிலம் அமைப்பது பற்றி உறுதியாக தெரியவில்லை. இதனை அடுத்து தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழு மாநிலம் தழுவிய போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறது. 48 மணி நேர முழு அடைப்பு போராட்டம், அரசு ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம், சட்டசபை முற்றுகை போராட்டம் போன்ற பல போராட்டங்களை நடத்தி வருகிறது. 

மேலும் ஐதராபாத்தில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகரராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், தெலுங்கானா கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தி விட்டோம். ஆநால் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே மத்திய அரசை தட்டி எழுப்பும் வகையில் வரும் 1ம் தேதியன்று தெலுகானா பகுதியில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும். அன்றைய தினம் ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரண்டு மறியலில் ஈடுபடுவார்கள். 1ம் தேதியன்று பயணிகளும் பயணம் செய்வதை தவிர்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago