முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விரைவில் படத்தில் நடிப்பேன்: ரஜினிகாந்த்

சனிக்கிழமை, 18 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூன்.19 - விரைவில் ராணா படத்தில் நடிப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனவுடன் அன்பார்ந்த ரசிகர்களுக்கு, பேனா, பேப்பர் எடுத்து எழுதும் போது வார்த்தைகள் வரவில்லை. 

எனக்கு, தமிழக அரசு எந்த நேரத்திலும் எந்த உதவியையும் செய்ய எனக்கு உறுதிமொழி கொடுத்த தமிழக முதல்வர் அவர்களுக்கும், என்றுமே என் மீது பாசத்தை வைத்திருக்கும் மதிப்பிற்குரிய என்னுடைய அருமை நண்பர் கலைஞர் அவர்களுடன் பேசிய பிறகு உங்களுடன் பேசுகிறேன்.

முதலில், உங்களிடம் பேசாமல் இருந்ததற்கு மன்னிக்கவும். இந்த விஞ்ஞான உலகத்தில் கூட, எந்த விளையாட்டை விளையாடினாலும் காசை மேலே தூக்கிப் போட்டு ஆட்டத்தை யார் முதலில் விளையாடுவது என்று முடிவு செய்கிறார்கள். காசை மேலே தூக்கிப் போடுவதான் மனிதனுடைய வேலை. வாக விழுவதா, தலையாக விழுவதா என்பது ஆண்டவனுடைய செயல். என்னுடைய இந்த விளையாட்டில் ஒரு பக்கம் பணம், விஞ்ஞானம் மருத்துவம், உலகத்திலேயே மிகச்சிறந்த மருத்துவர்கள் இருக்க.... 

இன்னொரு பக்கம், நான் நலம் அடைய கடவுள் பிரார்த்தனை, ஜைகள், ஹோமங்கள், விரதங்கள்தான் என்னை காப்பாற்றியது என்பதுதான் நூற்றுக்கு நூறு உண்மை என்பதை நான் நம்புகிறேன். ரஜினிக்கு எவ்வளவு மக்கள் அன்பு இருக்கிறது என்று உலகத்திற்கு காட்டி விட்டீர்கள். நான் இப்பொழுது குணம் அடைந்து கொண்டு இருக்கிறேன் என்றால் நீங்கள் எல்லோரும் என் மீது வைத்திருக்கின்ற அன்பு தான் காரணம். என்னை ஒரு அண்ணனாக, தம்பியாக, நண்பனாக, உங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாக நினைத்து எனக்கு செய்த ஜைகள் தான் காரணம். ஜென்ம ஜென்மத்திற்கும் உங்களுடைய அன்பை என்றும் மறக்க மாட்டேன். நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. இனிமேல், உங்களை மகிழ வைப்பது தான் என்னுடைய லட்சியம். கூடிய விரைவில், ராணாவில் உங்களை மகிழ வைக்க தோன்றுகிறேன். நான் உங்களுடைய எல்லா நன்மைக்காக ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன். 

இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago