முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டைரக்டர் செல்வராகவன் திருமணம்: சென்னையில் நடந்தது

திங்கட்கிழமை, 4 ஜூலை 2011      சினிமா
Image Unavailable

சென்னை, ஜூலை.- 4 - பிரபல சினிமா இயக்குனர் செல்வராகவன். இவர் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை போன்ற படங்களை டைரக்டு செய்துள்ளார். நடிகர் தனுஷின் அண்ணன் ஆவார்.  செல்வராகவனுக்கும், முன்னாள் அட்வகேட் ஜெனரல் ராமன் மகள் கீதாஞ்சலிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்கள் திருமணம் நேற்று காலை கிண்டியில் உள்ள லீராயல் மெரிடியன் ஓட்டலில் நடந்தது. இது காதல் திருமணமாகும். மணமகள் கீதாஞ்சலி அரக்கு நிறத்தில் பட்டு சேலை அணிந்திருந்தார். செல்வராகவன் பட்டு வேட்டி, ஜிப்பா அணிந்திருந்தார். திருமண சடங்குகள் காலை 8.50 மணிக்கு தொடங்கியது. 9.15 மணிக்கு வைதீக முறைப்படி புரோகிதர்கள் மந்திரம் ஓத கீதாஞ்சலிக்கு செல்வராகவன் தாலி கட்டினார். அப்போது கூடியிருந்தவர்கள் அட்சதை தூவி மணமக்களை வாழ்த்தினார்கள்.
பட அதிபர் ஏ.வி.எம்.சரவணன், தொழில் அதிபர், எம்.ஏ.எம்.ராமசாமி, டைரக்டர் மணிரத்னம், சுகாசினி, தயாரிப்பாளர்கள் ராம்குமார், சத்யஜோதி தியாகராஜன், நடிகர் சின்னி ஜெயந்த், அரவிந்தசாமி, டைரக்டர் அழகம்பெருமாள், கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், போலீஸ் அதிகாரிகள் லத்திகா சரண், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நேரில் வாழ்த்தினார்கள்.
திருமணத்துக்கு வந்தவர்களை செல்வராகவனின் தந்தை டைரக்டர் கஸ்தூரி ராஜா, நடிகர் தனுஷ், அவரது மனைவி ஐஸ்வர்யா ஆகியோர் வரவேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago