முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியானா-பஞ்சாபில் மாநிலங்களில் பலத்த மழை

சனிக்கிழமை, 9 ஜூலை 2011      இந்தியா

சண்டிகார்,ஜூலை.- 9 - அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பத்தில் இருந்து மக்கள் கொஞ்சம் நிவாரணம் பெற்றுள்ளனர். தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் 1-ம் தேதியே தொடங்கிவிட்டது. கேரளாவில் தொடங்கிய இந்த பருவமழை ஆரம்பத்தில் நல்ல மழை பெய்தாலும் கடந்த ஒருமாத காலமாக இடுக்கி மாவட்டம் உள்பட கேரளத்தின் மையப்பகுதியில் போதிய அளவு மழை இல்லை. இதனால் பெரியாறு அணைக்கு வரும் தண்ணீர் நின்றுவிட்டது. அதேசமயத்தில் வடமாநிலங்களில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிவிட்டது. மகாராஷ்டிராம், ராஜஸ்தான், ஆந்திரம், மேற்குவங்காளம் டெல்லி அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. அரியானாவிலும் பஞ்சாப் மாநிலத்தின் ஒரு பகுதியிலும் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் அந்த மாநிலங்களில் வெப்பம் தணிந்துள்ளது. அதிகப்பட்சமாக அம்பாலா நகரில் 8.5 செ.மீ. மழை பெய்தது. ஹிசார், சண்டிகார், அமிர்தசரஸ், லூதியானா, பாட்டியாலா ஆகிய இடங்களில் சுமாரான மழை பெய்துள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் யமுனா,தங்க்ரி, ரவி,பியாஸ் ஆகிய நதிகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!