முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலவரையற்ற உண்ணாவிரதத்தை குமாரசாமி முடித்துக்கொண்டார் எடியூரப்பா கடிதம்

திங்கட்கிழமை, 11 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

பெங்களூர்,ஜூலை.-11 - கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி தனது காலவரையற்ற உண்ணாவிரதத்தை நேற்றுடன் முடித்துக்கொண்டார். முன்னதாக அவருக்கு முதல்வர் எடியூரப்ப ரகசிய கடிதம் ஒன்றை கொடுத்து அனுப்பினார்.  மதசாரபற்ற ஜனதாதளம் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடாவின் மகனும் கர்நாடக மாநில முன்னாள் முதல்வருமான குமாரசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் முறைகேடாக ரூ.ஆயிரத்து 500 கோடிக்கு சொத்து குவித்திருப்பதாக பாரதிய ஜனதா குற்றஞ்சாட்டியது. இந்த குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரிக்கக்கோரி குமாரசாமி நேற்றுமுன்தினம் பெங்களூரில் உள்ள சுதந்திர பூஙகாவில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். இதனால் கர்நாடாகவில் ஒரு பெரும் அரசியல் நெருக்கடி உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் குமாரசாமி திடீரென்று நேற்று உண்ணாவிரதத்தை நிறுத்திக்கொண்டார். மேலும் ஞானபீட விருது பெற்றுள்ள யு.ஆர். ஆனந்தமூர்த்தி நேராக சென்று உண்ணாவிரதத்தை நிறுத்தும்படி குமாரசாமியை கேட்டுக்கொண்டார்.  கட்சியினர் கட்டளையை ஏற்று உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக குமாரசாமி தெரிவித்துள்ளார். உண்ணாவிரதத்தை முடிக்கும்போது ஆனந்தமூர்த்த ஒரு டம்ளர் பழச்சாறை குமாரசாமிக்கு கொடுத்தார். அதை குடித்து குமாரசாமி உண்ணாவிரத்தை முடித்துக்கொண்டார்.
தனிப்பட்ட முறையில் உண்ணாவிரதத்தை தொடர நான் விரும்பினேன். ஆனால் என்னுடைய கட்சி தலைவர்கள், கட்சியினர்,முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் என்னை உண்ணாவிரதத்தை கைவிடும்படி தொடர்ந்து வலியுறுத்தியதால் உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளேன் என்று குமாரசாமி மேலும் கூறினார். என் மீதும், குடும்பத்தார் மீதும் முதல்வர் எடியூரப்பாவும் பாரதிய ஜனதாவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவது கண்டிக்கத்தக்கது என்றும் குமாரசாமி மேலும் கூறினார்.
முன்னதாக உண்ணாவிரத்தை கைவிடும்படி குமாரசாமிக்கு முதல்வர் எடியூரப்பா ஒரு ரகசியம் கடிதம் ஒன்றை கொடுத்துவிட்டார். இந்த கடிதத்தை மாநில உள்துறை அமைச்சர் ஆர். அசோகா, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பச்சேகவுடா, வீட்டுவசதித்துறை அமைச்சர் வி.சோமன்னா ஆகியோர் கொண்டு சென்று குமாரசாமியிடம் கொடுத்தனர். மேலும் குமாரசாமி உடல்நிலையை பரிசோதித்த டாக்டர்கள், உண்ணாவிரதத்தை தொடர்ந்தால் ரத்த அழுத்தமும்,சர்க்கரை அளவும் கூடவும் குறையவும் செய்யும் என்று குமாரசாமியை எச்சரித்ததும் குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!