எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சின்னமனூர்,மார்ச்.1 - தமிழகத்தில் ஆட்சி செய்து தி.மு.க கூட்டணியை தோற்கடித்து நாட்டை விட்டு விரட்ட வேண்டும்.அதற்கு மக்கள் அனைவரும் அ.தி.மு.க கூட்டணிக்கு வாக்களியுங்கள் என நாம் தமிழர் இயக்கத்தலைவர் நடிகர் சீமான் பேசினார்.தேனி மாவட்டம் சின்னமனூரில் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக பொது கூட்டம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு சீமான் பேசுகையில்: முல்லைபெரியாறு அணையில் என் இனம் இழந்து விட்ட உரிமையை மீட்டெடுக்க வேண்டும்.ஐந்து முறை நாட்டை ஆண்ட தமிழக தற்போதைய முதல்வர் ஏன் இதை பற்றி அக்கறை கொள்ள வில்லை.உச்ச நீதி மன்ற தீர்ப்பை மீறி புதிய அணை கட்டுவோம் என கூறும் கேரள அரசை பார்த்து வேடிக்கை பார்ப்பது தான் தி.மு.க கூட்டணியின் சாதனையா? இடுக்கி மாவட்டம் தமிழ்நாட்டிலிருந்து தாரை வார்த்து கொடுக்கப்பட்டது. பெரியாறுஅணை தமிழர்களுடையது அதை யாராலும் பிடுங்க முடியாது.அந்த அணை தன் மானமுள்ள தமிழர் இனத்தால் கட்டப்பட்டது.இந்த அணை வெள்ளையரான பென்னிக்குக்கால் அவர் சொத்தை விற்று கட்டப்பட்டது.ஒரு வெள்ளைகாரனுக்கு உள்ள அக்கரை கூட கருணாநிதிக்கு இல்லையே.ஐந்து முறை முதல்வர் என மார்தட்டி சொல்லும் தி.மு.க அரசு எத்தனை அணை கட்டியுள்ளது.காவிரி நீர் பிரச்சனை தி.மு.க கூட்டணியால் தீர்க்கப்பட்டதா தவித்த வாய்க்கு தண்ணீர் தர மறுக்கிறது.கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழ்நாட்டிலுள்ள சிதம்பரம் கோவிலில் சாமி கும்பிட வருகிறார் ஏன் என்று கேட்டால் கர்நாடகத்தில் நல்ல மழை பெய்ய வேண்டுமாம் ,ஏன் அதே மழை தமிழகத்தில் பெய்தால் நாங்களே விவசாயம் செய்து கொள்வோமே.உங்கள் கர்நாடகத்தில் மழை பெய்து அணை நிரம்பி எங்களுக்கு தர வேண்டும் என்பது அவசியமில்லையே.தி.மு.க கூட்டணி அரசே நாங்களே காவிரிநீர் தேவையில்லை என சுவரொட்டிகள் அடித்து ஒட்டப்போகிறோம்.ஒட்டி விட்டு நெய்வேலியில் 50 ஆயிரத்திற்கும் மேல் மக்களை திரட்டி கர்நாடகத்திற்கு மின்சாரத்தை கொடுக்காதே என போராட்டம் செய்யப்போகிறோம்.காஷ்மீரை பிரித்து கொடு இல்லை எனில் எங்கள் மண்ணான கச்சதீவை எங்களிடம் கொடுத்து விடுங்கள்.
மத்திய அரசின் நதிநீர் நடுவர் மன்றமும்,உச்சநீதிமன்றமும் தன் தீர்ப்பை சொன்னாலும் ,கேரள,கர்நாடக,மாநிலங்கள் மதிப்பதில்லை ஏன்? கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் அவர்களுக்கு எதிராக தி.மு.க செயல் பட்டதுண்டா? கேட்டால் கடிதம் எழுதுகிறேன் என்கிறார் முதல்வர் கருணாநிதி.மீனவர் பிரச்சனையா ?மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன் ,முல்லைபெரியாறு பிரச்சனையா? கடிதம் எழுதியிருக்கிறேன் காவிரிநீர் பிரச்சனையா?கடிதம் எழுதியிருக்கிறேன் ,இலங்கை தமிழர்கள் பிரச்சனையா?கடிதம் எழுதியிருக்கிறேன்,இவர் என்ன தபால் நிலையத்திலா வேலை செய்கிறார்.இவர்கள் அரசு தான் நாடு முழுவதும் தொலைபேசியில் 50 பைசாவிற்கு பேசலாம் என திட்டம் போட்டது,ஆனால் இவர் இன்னும் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார்.
மீண்டும் தி.மு.க ,காங்கிரசுடன் கைகோர்த்து நிற்கிறது.இதற்கு வேறு காரணம் ஏதும் இல்லை.கூட்டணி சேராவிட்டால் ஸ்பெக்டரம் ஊழலில் தன் மனைவி ராஜாத்தியும்,மகள் கனிமொழியும் கைதாகி விடுவார்கள் என்ற பயம் தான்,தி.மு.க -காங்கிரஸ் கூட்டணி கெட்டி கூட்டணி இல்லை பெட்டி கூட்டணி.
இலவசங்களை அள்ளி தருகிறோம் என கூறும் திமுக அரசால் தமிழக அரசு 1 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? 1ரூபாய்க்கு அரிசி தருகிறோம் என கூறும் தி.மு.க அரசை மேடை போட்டு பாராட்டலாம்,அதே போல் விலைவாசி உயர்வு,மின்சார பற்றாக்குறை என அதே போல் மேடை போட்டு திட்டலாமா.
தற்போது ஊடகங்களிலும் செய்திதாள்களிலும் பார்த்திருப்பீர்கள் ! லிபியா ,எகிப்து போன்ற நாடுகளில் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து புரட்சி வெடித்தது என்று காரணம் என்ன என்று கேட்டால் ஒரே அரசு 30 ஆண்டு காலம் ஆட்சி செய்து வருவதால் அங்கு மக்கள் போராடி வருகிறார்கள்.அதை விட கொடுமையான வாரிசு அரசியல் இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது.60 ஆண்டுகளாக இந்தியாவில் வாரிசு அரசியல் செய்யும் காங்கிரஸ் ,அதே போல் தமிழ்நாட்டில் தமிழ்,தமிழ் என பேசும் கருணாநிதியின் தி.மு.க தனக்கு அடுத்து ஸ்டாலின் ,அழகிரி,கனிமொழி,அவர்களுக்கடுத்து பேரன்கள் உதயநிதி ஸ்டாலின் ,தயாநிதி அழகிரி,என வாரிசு அரசியல் செய்யும் திமுக கூட்டணியை நாட்டைவிட்டு விரட்ட வேண்டும்.
தமிழ்நாட்டை ஆண்ட எம்.ஜி.ஆர் போல் கருணாநிதிக்கு தமிழக மக்கள் மீது அக்கரை இல்லை.ஓட்டுக்கு பணம் கொண்டு வரும் தி.மு.க காரர்களிடம் கேள்,நண்பா இந்த பணம் எப்படி வந்தது?யாருடையது அப்பன் வீட்டு பணம்? உன் தலைவர் கருணாநிதியும்,சோனியா அம்மையாரும் அவர்களுடைய சொத்தை விற்று கொடுத்த பணமா?என கேள் அவை எல்லாம் நம்முடைய பணம்,ஒரு தொகுதிக்கு 100 கோடி ரூபாய் செலவழித்து தி.மு.க கூட்டணி ஜெயிக்க நினைக்கிறது,ஏன் இவ்வளவு செலவு செய்கிறது.ஒரு தொகுதிக்கு 100 கோடி ரூபாய் செலவழித்தால் 1000 கோடி ரூபாய் ஊழல் செய்து சம்பாதித்து கொள்ளலாம் என்ற தைரியம் .
இன்னும் சில நாட்களில் தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து தெரிந்து விடும்.நானும் ஆவலுடன் இருக்கிறேன்.அவர்கள் தமிழகத்தில் உள்ள அத்தனை தொகுதிகளிலும் தோற்கடிக்க பட வேண்டும்.அது நடக்க வேண்டுமென்றால் அதனை எதிர்த்து போட்டியிடும் அ.தி.மு.க கூட்டணிக்கு ஓட்டு போடுங்கள். தமிழ் சொந்தங்களே நாம் நலம் காக்க தி.மு.க கூட்டணியை வீழ்த்த வேண்டும்.அவ்வாறு வீழ்த்தும் போது தமிழன் உலகளவில் தன்னுடைய தன் மானத்தை நிலை நிறுத்த முடியும் என பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
தங்கம், வெள்ளி விலை மீண்டும் புதிய உச்சம்..! கடந்த 4 நாட்களில் ரூ.3,360 அதிகரிப்பு
25 Dec 2025சென்னை, தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ. 160 உயர்ந்து ரூ. 1,02,560 -க்கு விற்பனையாகு புதிய உச்சம் தொட்டுள்ளது. இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.
-
வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலம்: போப் 14-ம் லியோ உரை
25 Dec 2025வாடிகன், வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது, போப் 14-ம் லியோ முதல் திருப்பலியில் உரையாற்றினார்.
-
உலகம் அழிவதை தற்போது கடவுள் தள்ளிப்போட்டுள்ளார்: கானா நாட்டு தீர்க்கத்தரிசி அந்தர்பல்டி
25 Dec 2025அக்ரா, நம்மில் பலருக்கு உலகம் அழியப்போகிறது என்ற வார்த்தை 2004-ம் ஆண்டு முதல் கேட்டுக்கொண்டு வருகிறோம்.
-
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர்கள் கைது
25 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை கைது செய்ய தனித்துறை (ஐஸ்) உருவாக்கப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர்கள் கைது செ
-
அமெரிக்காவின் எச்-1பி விசா வழங்கும் முறையில் மாற்றம்
25 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவின் எச்-1பி விசா வழங்குவதற்கான குலுக்கல் முறையை ட்ரம்ப் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
-
101-வது பிறந்தநாள்: வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி
25 Dec 2025புதுடெல்லி, வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள 'சதைவ் அடல்' நினைவிடத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.
-
ஓ.பி.எஸ்.சும், தினகரனும் தே.ஜ. கூட்டணியில் இல்லை: நயினார் நாகேந்திரன் பேட்டி
25 Dec 2025கிருஷ்ணகிரி, ஓ.பன்னீர்செல்வமும், தினகரனும் எங்கள் கூட்டணி யில் இல்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
டெல்லியில் இருந்தபோது சுவாச தொற்று ஏற்பட்டது: மத்திய அமைச்சர் வருத்தம்
25 Dec 2025புதுடெல்லி, டெல்லி இருந்தபோது காற்று மாசு காரணமாக சுவாச தொற்று ஏற்பட்டதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வருத்தம் தெரிவித்துள்ளார்.
-
இந்தியா கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்: வைகோ கண்டனம்
25 Dec 2025சென்னை, இந்தியா கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்நடத்திய வன்முறையாளர்களை சம்பவம் நடைபெற்ற மாநிலங்களின் அரசுகள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று வைகோ தெரிவி
-
அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே பாடப்புத்தகங்களை வழங்க நடவடிக்கை
25 Dec 2025சென்னை, அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாளிலேயே 3-ம் பருவத்துக்கான பாடப்புத்தகம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
-
பொருளாதாரத்தில் இந்தியா மிக விரைவில் முதல் இடம் பிடிக்கும்: மத்திய இணை அமைச்சர் நம்பிக்கை
25 Dec 2025கோவை, பொருளாதாரத்தில் இந்தியா விரைவில் முதல் இடம் பிடிக்கும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-12-2025.
25 Dec 2025 -
சிறுபான்மையினர் மீது தாக்குதல் எதிரொலி: கலவர கும்பலை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
25 Dec 2025சென்னை, சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தி நாட்டுமக்களைப் பிளவுபடுத்தி குளிர்காய நினைக்கும் கலவர கும்பலை இரும்புக்கரம்
-
காற்று சுத்திகரிப்பானுக்கு அதிக ஜி.எஸ்.டி. வரி விதிக்கலாமா...? டெல்லி உயர் நீதிமன்றம் காட்டம்
25 Dec 2025புதுடெல்லி, ஒவ்வொரு குடிமகனுக்கும் சுத்தமான காற்று தேவை. அதற்கான குறைந்தபட்ச நடவடிக்கையாக அரசு காற்று சுத்திகரிப்பான்களை வழங்கலாம் என்று டெல்லி ஐகோர்ட் கூறியது.
-
இந்தியா வணிக வர்த்தகத்தில் சுமார் 10.73 சதவீதம் அமெரிக்காவை சார்ந்தது: அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தகவல்
25 Dec 2025வாஷிங்டன், இந்தியா வணிக வர்த்தகத்தில் 10.73 சதவீதம் அமெரிக்காவை சார்ந்தது என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தெரிவித்தார்.
-
ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவின் திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்த ஜெலன்ஸ்கி
25 Dec 2025கீவ், ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவின் திட்டத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு
25 Dec 2025சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரளா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவ
-
2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி செல்கிறார்
25 Dec 2025சென்னை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று அரசின் பல்வேறு துறைகளின் கீழ் மொத்தம் ரூ.1,045 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2 லட்சத்து 16 ஆயிரத்த
-
த.வெ.க. தலைவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து
25 Dec 2025சென்னை, த.வெ.க. தலைவர் விஜய் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பனிமூட்டம் காரணமாக மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கம்
25 Dec 2025சென்னை, பனிமூட்டம் காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு வரும் ரயில்கள் சற்று தாமதமாக வருகை தருகின்றன.;
-
தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் கோலாகம்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
25 Dec 2025சென்னை, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு திருப்பலி நடைபெற்று உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
-
உ.பியில் ரூ.230 கோடியில் தேசிய நினைவிடம் - அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
25 Dec 2025புதுடெல்லி, உ.பியில் ரூ.230 கோடியில் தேசிய நினைவிடம் - அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.
-
திட்டக்குடி கோர விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
25 Dec 2025சென்னை, திட்டக்குடி கோர விபத்து குறித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
வேலு நாச்சியார் நினைவு நாள்: த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை
25 Dec 2025சென்னை, வேலு நாச்சியார் நினைவு நாளை முன்னிட்டு த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.
-
தி.மு.க. ஆட்சிக்கு இப்போதும் கூடுதல் வரவேற்பு கிடைக்கிறது: அமைச்சர் முத்துசாமி தகவல்
25 Dec 2025ஈரோடு, தி.மு.க.


