முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போக்குவரதுத்து தொழிலாளர்களை பணி நிரந்தர பண்ண வலியுறுத்தல்

புதன்கிழமை, 2 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச். 2- தருமபுரி, சேலம் கோட்டப் போக்குவரத்து தொழிலாளர்கள் 1300 பேருக்கு பணி நிரந்தர ஆணை வழங்க வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தருமபுரி​சேலம் கோட்டத்திற்கு 2007​ஆம் ஆண்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இருந்து தமிடிநநாடு அரசு போக்குவரத்துத் துறையில் பணியாற்ற ஓட்டுநர், நடத்துநர் பணிக்கான நேர்காணலுக்குத் தகுந்த ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோர் பணிக்கப்பட்டனர். வண்ணக் கனவுகளுடன் தங்களின் படிப்பு, திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவோம் என்ற நம்பிக்கையோடு

நேர்காணலுக்குச் சென்றவர்களுக்குப் பேரிடியாக ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்குச் சில இலட்சங்கள் விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் பணத்தைச் சம்பந்தப்பட்ட ஆளுங்கட்சிப் புள்ளியிடம் கட்டி இரசீது காண்பித்தால் வேலை உறுதி என்றும் அவர்களிடம் சொல்லப்பட்டது.

வறட்சியினால் பின்தங்கிய மாவட்டத்தில் வறுமைக்கோட்டில் வாழ்பவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கி நின்றனர். இருப்பினும் எதிர்காலம் கருதி தங்களின் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தர்களாக நவீன வேதாளமான ஆளும் தரப்பை நிறைவு செய்ய தத்தம் குடும்பத்தினரிடம் பணம் கேட்டு சண்டையிட்டும், பலர் வட்டிக்குப் பணம் வாங்கியும், தங்களுக்குச் சொந்தமான வீட்டையும், நிலத்தையும் விற்றும், சிலர் தங்கள் மனைவியின் நகை, தாலியை விற்றும் ஒருவழியாக அதிகார வர்க்கத்தினரிடம் பணத்தைக் கட்டினர்.

2007​ஆம் ஆண்டு 1300 பேர் வேலைக்குச் சேர்வதற்கு அரசாணையும் 240 பணி நாட்களுக்குப் பின்னர் நிரந்தரம் செய்யப்படும் என்ற உத்தரவாதத்துடன் பணியில் சேர்ந்து ஆண்டுகள் நான்கு உருண்டோடின. பல 240 நாட்கள் பணி செய்த பின்பும் மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின் இறுதி நாட்கள் எண்ணப்படுகின்ற இந்த நாள்வரை அவர்கள் பணி

நிரந்தரம் செய்யப்படாமல் ஏமாற்றப்படுகின்றனர். 01 மார்ச் 2011

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அந்தத் தொழிலாளர்கள் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பயன் இல்லை. மாறாக, முன்னின்று கேட்பவர்களைப் பழிவாங்கும் நடவடிக்கையாகப் பணி nullக்கம் செய்வதும், இடமாற்றம் செய்வதுமாக அலைகழிக்கப்பட்டனர். இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அத்தொழிலாளர்கள் ஒட்டுமொத்தமாக வாழ்வா சாவா என்ற நிலையில் 25.02.2011 வெள்ளிக்கிழமை

தொடங்கி கடந்த ஐந்து நாட்களாகத் தம் குடும்பத்தினருடன் தொடர் உண்ணாவிரத அறவழிப் போராட்டம் இருந்து வருகின்றனர். இதற்கு அனுமதி இல்லை என்று காவல்துறை மிரட்டுகிறது. ஒலிபெருக்கி அனுமதி வழங்காமல் அவமதிக்கப்படுகின்றனர். ஜனநாயக நாட்டில் தான் உள்ளோமா அல்லது சர்வாதிகார நாட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோமா

என்று எண்ணும் நிலையில் தருமபுரி அரசு போக்குவரத்துத் தலைமை அலுவலகத்தின் எதிரே சாலை ஓரத்தில் சாமியானா பந்தலிட்டு நியாயம் வேண்டி தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதில் மொரப்nullர் இரமேஷ், நண்டுகாரம்பட்டி சண்முகம், ஊத்தங்கரை வடிவேல் ஆகியோர் நேற்று முன்தினம் மயங்கி விழுந்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுவரை அரசுத் தரப்பில் போராடி வரும் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த யாரும் முன்வரவில்லை. அரசின் இந்த அலட்சியப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன். வேலை வழங்கியதற்கு கையூட்டு இலஞ்சம் வாங்கியும் பணி நிரந்தரம் வழங்காதது மன்னிக்க முடியாத மாபெரும் தவறு. இதுதான் அரசு போக்குவரத்துத் துறை இயங்கும் இலட்சணம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போன்று இந்த அரசின் சார்பில் இதுவரை கையூட்டு லஞ்சம் பெற்று பணிகள் வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணக்கு இருக்கிறது. விரைவில் ஆட்சி மாறும்; அப்போது காட்சிகளும் மாறும். இதுபோன்ற லஞ்சம் வாங்கி மோசடி செய்தவர்கள் எவ்வளவு உச்சத்தில் இருந்தாலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். எனவே, தாமதம் இன்றி தருமபுரி​சேலம் கோட்டப் போக்குவரத்துப் பணியாளர்கள் 1300 பேருக்கும் பணி நிரந்தரம் வழங்கி ஆணை பிறப்பித்திட வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago