முக்கிய செய்திகள்

எல்லை வர்த்தகம்: இந்தியா - பாக். பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை

செவ்வாய்க்கிழமை, 19 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஜூலை.19 - இந்தியா-பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாடு கோடு நெடுகிலும் வர்த்தகம் மற்றும் பயணம் நாட்களை அதிகரிப்பது தொடர்பாக இருநாடுகளின் பிரதிநிதிகள் நேற்று டெல்லியில் சந்தித்து பேசினர். மும்பையில் கடந்த 13-ம் தேதி 3 இடங்களில் தொடர் குண்டுவெடித்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை பாகிஸ்தான் தீவிரவாதிகள்தான் நடத்தியிருக்க வேண்டும். அப்படியிருந்தும் இருநாடுகளிடையே நேற்று எல்லைப்பகுதியில் வர்த்தகம் மற்றும் பயண நாட்களை அதிகரிப்பது தொடர்பாகவும் பல்முறை அனுமதி வழங்குவது தொடர்பாக நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகளை உருவாக்குவதற்காக இருநாட்டு பிரதிநிதிகளும் நேற்று டெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எல்லை கட்டுப்பாடு கோடு நெடுகிலும் வர்த்தகம் மற்றும் பயண நாட்களை அதிகரிப்பதற்கு நம்பிக்கையை ஏற்படுத்த இருநாடுகளின் பிரதிநிதிகள் சந்தித்து பேசுவது முதல் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாத இறுதியில் இருநாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையே டெல்லியில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதற்கு முன்பு பணிக்குழு மட்டத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. தற்போது இருநாடுகளின் இடையே உள்ள எல்லை கட்டுப்பாடு கோடு நெடுகிலும் 2 நாட்கள் வர்த்தகம் மற்றும் பயணம் நடைபெற்று வருகிறது. இதை 4 நாட்களாக அதிகரப்பது தொடர்பாக நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. மேலும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குள் வர 6 மாத காலத்திற்கு அனுமதி வழங்கும் முறை குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: