முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொட்டு சுரேஷ் - எஸ்.ஆர்.கோபி வீடுகளில் சோதனை

வியாழக்கிழமை, 21 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

 

மதுரை,ஜூலை.20 - மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர்களான மதுரை திமுக நிர்வாகிகள் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஏராளமான ஆவணங்களை அள்ளிச்சென்றனர். தமிழகம் முழுவதும் கடந்த திமுக ஆட்சியில் நில மோசடி, ரவுடியிசம், கொள்ளை, கொலை என பல்வேறு சம்பவங்கள் தினந்தோறும் நடந்தன. இதில் குறிப்பாக அப்போதைய ஆளும் கட்சியான திமுகவினரே அதிகமாக ஈடுபட்டு வந்தனர். அதிலும் நில மோசடியில் திமுகவின் மாவட்ட செயலாளர்களும், அமைச்சர்களுமே அதிகமாக ஈடுபட்டனர்.  பாதிக்கப்பட்டவர்கள் அப்போது போலீசாரிடம் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. தேர்தல் பிரசாரத்தின் போது அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாதிக்கப்பட்டவர்கள் நிலத்தை திமுகவினரிடம் இருந்து மீட்டுத்தருவேன் என்று உறுதி அளித்தார். அதன் படி ஆட்சிக்கு வந்ததும் தமிழகம் முழுவதும் உள்ள நில மோசடி புகார்களை விசாரிக்க தனப்பிரிவு ஒன்றை உருவாக்கினார். இந்த தனிப்பிரிவு தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்ளிடம் புகார்களை வாங்கி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்த வருகிறது. இதில் முதற்கட்டமாக மதுரை திமுக பிரமுகரும், முன்னாள் வேளாண் விற்பனை குழு தலைவருமான  அட்டாக்பாண்டி கைது செய்யப்பட்டார். அவர் மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக மதுரை மாநகர் திமுக பகுதி செயலாளர் ஆர்.எஸ்.ராமலிங்கத்தின் தம்பி ஆர்.எஸ்.கணேசன் ஜெய்கிந்துபுரத்தில் 20 சென்ட் நிலத்தை போலி ஆவணம் மூலம்  தயாரித்து அபகரித்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். சேலத்தில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீதும் நில மோசடி தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

           மேலும் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள செங்குளத்தைச் சேர்ந்த சிவனாண்டி அவரது மனைவி பாப்பா ஆகியோர்  மதுரை புறநகர் மாவட்ட குற்றப்பிரிவு நில அபகரிப்பு தனிப்படையிடம் ஒரு புகாரின் போலீசார் வழக்கு பதிவு செய்துஅதில்  திமுக மாவட்ட செயலாளர் தளபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் சுரேஷ்பாபு, திருமங்கலம்  ஊராட்சி ஒன்றிய தலைவர் கொடி.சந்திரசேகரன், திருப்பரங்குன்றம் முன்னாள் திமுக நகர செயலாளர்  கிருஷ்ண பாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மத்திய அமைச்சரின் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர்களாகவும், மதுரையில் மு.க.அழகிரியின்  நிழலாக செயல்பட்டு வந்த தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ், மற்றொரு தலைமை செயற்குழு உறுப்பினர் வில்லாபுரத்தை சேர்ந்த எஸ்.ஆர்.கோபி ஆகியோர் வீடுகளில் நேற்று மதியம் முதல் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மதியம் 1.30 மணி அளவில் மதுரை ஆயுதப்படை டிஎஸ்பி கோவிந்தராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார்  வில்லாபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.கோபி வீட்டுக்கு சென்றனர். அப்போது வீட்டில் இருந்த பெண்கள் போலீசாரை  சோதனை நடத்த அனுமதிக்க மறுத்தனர். இதன் பிறகு எஸ்.ஆர்.கோபியின் தம்பியும், அவனியாபுரம் நகராட்சி தலைவருமான போஸ் முத்தையா வந்த பிறகு போலீசார் சோதனை நடத்தினர். இதே போல் எஸ்.ஆர்.கோபியின் தோட்டத்தில் உள்ள பங்களாவிலும் மதுரை திருப்பரங்குன்றம் டிஎஸ்பி முருகேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் தெய்வீக பாண்டியன், வேல்முருகன் ஆகியோர் சோதனை நடத்தினர்.  சுமார் 5 மணி நேரம் இந்த அதிரடி சோதனை நடந்தது. இந்த சோதனையின் போது வில்லாபுரத்தில் உள்ள எஸ்.ஆர் கோபி வீட்டில் 6 ஆவணங்களும், தோட்டத்தில் உள்ள பங்களாவில் 7 ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

    சோதனையின் போது எஸ்.ஆர். கோபி, பொட்டு சுரேஷ் ஆகியோர் வீடுகளில் இடம், வீடுகள் ஆக்கிரமிப்பு,  சொத்துக்கள் தொடர்பான ஏராளமான ஆவணங்களை போலீசார் கைப்பற்றி அள்ளிச்சென்றனர். ஏற்கனவே இட மோசடியில் கைதாகி இருக்கும் பொட்டு சுரேஷ் மீது இந்த ஆவணங்கள் மூலம் மேலும் வழக்குகள் பதிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதே போல் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர். கோபி மீதும் கைப்பற்றப்பட்ட ஏஆவணங்கள் மூலம் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்