முக்கிய செய்திகள்

நாட்டில் உணவு பணவீக்கம் 7.58 சதவீதமாக குறைந்தது

வெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஜூலை.22 - நாட்டின் உணவு பணவீக்கம் 8.31 சதவீதத்தில் இருந்து 7.58 சதவீதமாக குறைந்தது என்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் இறுதியில் உணவு பணவீக்கம் 8,31 சதவீதமாக இருந்தது. இது கடந்த ஜூலை 9-ம் தேதி முடிய 7.58 சதவீதமாக குறைந்தது. இதே காலக்கட்டத்தில் பணவீக்கமும் குறைநதுள்ளது. 11.58 சதவீதமாக இருந்த பணவீக்கம் 11.13 சதவீதமாக குறைந்தது. அதேசமயத்தில் எரிபொருள் பணவீக்கம் குறையவில்லை. 11.89 சதவீதமே தொடர்ந்து நீடித்தது. ராகி, பழங்கள், காய்கறிகள் பார்லி, கிராம், கோழி ஆகியவைகளின் விலை அப்படியே இருந்தது. மீன், சோளம் ஆகியவைகளின் விலை குறைந்தது. எண்ணெய் விலைகளும் அதிகரித்துள்ளன. இஞ்சி, மிளகு போன்ற பொருட்களின் விலையில் ஓரளவு குறைந்திருப்பதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: