முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெகன் மீது பொய்வழக்கு: ரோஜா குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      சினிமா
Image Unavailable

நகரி, ஆக.6 - ஜெகன்மோகன் ரெட்டி மீது சொத்து குவிப்பு வழக்கு என்ற பொய்யான வழக்கை தொடர்ந்து அவரது கட்சியை அழிக்க காங்கிரஸ் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக நடிகை ரோசா குற்றம் சாட்டியுள்ளார். நடிகை ரோசா தற்போது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசில் முன்னணி தலைவர்களில் ஒருவராக உள்ளார். அவர் நகரியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசியதாவது, ஆந்திர மக்கள் ஜெகன்மோகன் ரெட்டியை முதல்வராக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆந்திராவுக்கு எப்போது தேர்தல் நடந்தாலும் ஜெகன்மோகன் ரெட்டிதான் முதல்வர் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் மீது சொத்துக் குவிப்பு என்ற பொய்வழக்கை காங்கிரஸ் தொடர்ந்து அவரை அழித்துவிட நினைக்கிறது. இதனை ஜெகன் எளிதில் முறியடித்துவிடுவார். ராஜசேகர ரெட்டி பரம்பரை பணக்காரர். அவர் முதல்வராவதற்கு முன்பே கோடீஸ்வரர். அவர் பணத்தை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து தனது ஒரே மகன் ஜெகனுக்கு முறைப்படி எழுதிவைத்தார். அதற்கெல்லாம் கணக்குள்ளது. எனவே ஜெகனில் பெயரைக் கெடுக்கவே இந்த வழக்கு. எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் ஆந்திர மக்கள் மனத்திலிருந்து ஜெகனை நீக்கவே முடியாது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago