முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலூரில் நாகம்மாள் கோவில் திருவிழா பக்தர்கள் பால்குடம் மற்றும் வேல் குத்தினர்

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2011      ஆன்மிகம்
Image Unavailable

மேலூர், ஆக.- 17 - மதுரை மாவட்டம் மேலூரில் நகராட்சி அலுவலகம் அருகே பிரசித்தி பெற்ற நாகம்மாள் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடிமாதத்தில் சிறப்பாக விழா கொண்டாடப்படும். இந்த ஆண்டு திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. முதல்நாள் நிகழ்ச்சியான நேற்று காலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் மற்றும் அலகு குத்தி வந்தனர். காலை 9 மணி அளவில் மண்கட்டி தெப்பக்குளம் அருகே பக்தர்கள் ஒன்று கூடினர். பின்னர் அங்கிருந்து பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டு அழகர்கோவில் ரோடு, பெரியகடை வீதி, செக்கடி வழியாக கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் கொண்டு வந்த ஆயிரக்கணக்கான லிட்டர் பால் கோவில் முன்புள்ள அண்டாக்கலில் ஊற்றப்பட்டது. பின்னர் பம்பு செட் மூலமாக அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் சிறப்பம்சமாக அலகு குத்துவதில் ஒரே வேலில் 4 பேர் அலகு குத்தி வந்தது பெரும் சாதனையாக இருந்தது. இவ்விழாவில் மேலூர் மற்றும் அதன் சுற்றுப்புறத்திலுள்ள அனைத்து கிராமத்தினர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். பக்தர்கள் ஊர்வலமாக வந்ததை அடுத்து போக்குவரத்து 3 மணி நேரம் மாற்றியமைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago