எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
							
						
	சென்னை, ஆக.- 18 -  சாயப்பட்டறை தீர்வு மூலம் கொங்கு மண்டலத்தை  காத்த கருணை தெய்வம் முதல்வர் ஜெயலலிதா என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழாரம் சூட்டினார். சட்டப்பேரவையில் நேற்று தொழில்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது இதில் கலந்துகொண்டு தொழில்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது: ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னால் வாராது போல் வந்த மாமணி, காய்ந்து சிவந்த கதிரவனின் நிறத்தை ஈந்து சிவந்த கரத்தாலே வென்ற எங்கள் வாய்மை மிக்க தூய்மை தலைவி,உலக தமிழ்மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை  வணங்குகிறேன்.  புண்ணிய பூமியில் பிறந்த பொன்னும்,வைரமும், தண்ணீரிலே தோன்றிய முத்தும் பவளமும்,  தடாகத்தில் மலர்கின்ற அல்லியும் தாமரையும்,  சோலையில் கிடைக்கின்ற மாவும் பலாவும், காடுஅள்ளித்தரும் அகிலும் சந்தனமும் , நல்லமான் தருகின்ற கஸ்தூரியும், தமிழின் இனிமையும், வளமையும் பெருமையும் போல் கோடான கோடிமக்களின் மனக்கோவிலில் கொலுவிருக்கும் வாடாத பாரிஜாதமே, மாணிக்க மணி தீபமே, தேடாது கிடைத்த செல்வமே,  எங்கள் இதயங்களில் வாழும் குல தெய்வமே, சிலம்புண்டு, மணிமேகலையுண்டு,வளையாபதி- சீவகசிந்தாமணி, பாரதி -பாரதிதாசன் எனும் குங்குமத் திலகமுண்டு,இவையனைத்தும் தமிழ் அன்னைக்கு காப்பாகும். தஞ்சைத் தரணியில் உலகத்மிழ்மாநாடு நடத்தி முத்தமிழுக்குப்பின் ,அறிவியல் தமிழை இந்த உலகுக்கு அறிவித்த தமிழாய்ந்த தமிழ்மகளே, ஏழரைக்கோடி தமிழ் சமுதாயத்தின் ஆராதனைக்குரியவரே, அடிமட்டத்தொண்டனையும், எம்.பி. எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர்களாகவும் ஆளாக்கி  அழகுபார்க்கும் எங்களின் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அ.தி.மு.க. வின் கடைக்கோடி உண்மைத் தொண்டனாயிருந்த என்னை மாணவரணி பொறுப்பாளராக நியமித்து பல்வேறு கட்சி பொறுப்புக்களில்  அமரவைத்து அழகு பார்த்து பின்னர் இரண்டுமுறை  தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக்கி  பின்னர் அமைச்சராக்கிய இந்தியாவின் இரும்புப்பெண்மணி, தங்கத்தாரகை, எங்கள் குடும்ப விளக்கு,தமிழகத்தின் குலவிளக்காகிய தங்களுக்கு என் கோடானகோடி வணக்கங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
	என்னுடைய வாழ்நாள் முழுவதும் நன்றி செலுத்துவது மட்டுமல்லாமல்,என் குடும்பத்தினர், என் வழிவரும் சந்ததியர்கள் அத்தனை பேரும் நன்றியோடு இருந்தாலும் நன்றிக் கடன் தீராது. ஏழைகளின் நில அபகரிப்பில் கொள்ளையடித்து அகப்பட்டுக்கொண்டவர்கள் நோட்டுக்கு ஓட்டு என்ற திருமங்கலம் பாணி திருடர்களின் கொட்டத்தை அடக்கிய எங்கள் பட்டத்து அரசியே, தமிழ் ஈழத்தை இழவாக்கிவிட்டு கோவையில் கொண்டாட்டம் போட்ட குள்ளநரி கூட்டங்கள்,கொள்ளையடித்த பணத்தில் கூட்டம் சேர்த்து கலையிலும், இலக்கியத்திலும் நச்சுக்கலந்து சந்தை பொருளாக்கி செந்தமிழை விற்றுப்பிழைக்கும் தீயசக்திகளின் ஆறாவது முறையாத தமிழக முதல்வர் என்று கொக்கரித்த துரோகிகளை , 14 வது சட்டமன்ற தேர்தலில்  வீழ்த்திக்காட்டி மூன்றாவது முறையாக முதல்வர் பொறுப்பேற்று அ.தி.மு.க. வை கோட்டையில் அமரவைத்த எங்கள் குலவிளக்கே,  எதிரிகள் ஏசிடும் சுடுமொழிகளை வீசிடும் குளிர் தென்றலாய் ஏற்று புன்னகை க்கும் புதுநிலவே, மைனாரிட்டி தி.மு.க.அரசின் கொடுங்கோல் குடும்ப ஆட்சியிலிருந்து தமிழக மக்களை காப்பாற்ற  கோவை, திருச்சி, மதுரை ஆகிய  இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி மக்களுக்காக போராடி வெற்றி கண்ட  எங்கள் வணக்கத்துகுரிய அன்னையே.
	அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திப்பவன் அரசியல் வாதி, ஆனால் அடுத்த தலைமுறைப்பற்றி சிந்திப்பவன் ஜனநாயகவாதி என்ற வரிகளுக்கேற்ப மக்களாட்சித் தத்துவத்தை  புரியவைத்த புனிதவதியே, பகைமை அன்பு வெல்லும், துரோகத்தை தியாகம் வெல்லும், அச்சத்தை துணிவு வெல்லும்,  அநியாயத்தை நியாயம் வெல்லும், அதர்மத்தை தர்மம் வெல்லும், அட்டூழியத்தை அறம் வெல்லும் இவற்றின்ஒட்டுமொத்த உருவாமாக திகழும் எங்கள் அன்னையே!
	கருணாநிதியின் சவால்களையும் , பொய் வழக்குகளையும் சந்தித்து,நீதிமன்றங்களின் நெடியபடிக்கட்டுகளில் ஏறியிறங்கி வழக்குகளை சந்தித்தபோது அன்றைய காங்கிரஸ் கட்சியை சார்ந்த எதிர்கட்சி தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் ஜெயலலிதா மீதான பொய்வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று பல்வேறு நிகழ்வுகளை மேற்கோள்காட்டி வழக்குகளை திரும்பப்பெற கோரியதில், அதற்கு பதிலுரையாக முதல்வர் ஜெயலலிதா துணிச்சலோடு,அத்தனை வழக்குகளையும் நீதிமன்றத்தில் சந்தித்து நிரபராதி என நிரூப்பிப்பேன் என்று சூளுரைத்து, நான் வண்ணத்துப் பூச்சி அல்ல. நான் ஒரு இரும்புப்பெண்மணி  என்றுரைத்த இந்தியாவின் வீரப்பெண் நேதாஜியே.
	தட்டுங்கள் திறக்கப்படும் என்று சொன்னார் ஏசுபிரான், ஆனால் தட்டாமலேயே அள்ளித்தரும் அட்சயபாத்திரம் எங்கள் முதல்வர், பொறுப்பேற்ற இரண்டே மாதங்களில் கொங்கு மண்டலமான கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலுள்ள சாயப்பட்டறை உரிமையாளர்களின் குறையறிந்து, சாயப்பட்டறைகளில் புதிய தொழில்நுட்பத்தை கடைப்பிடிக்க ரூபாய் 200 கோடியை வட்டியில்லா கடனாகவும் மற்றும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு  விவசாயிகளின் குடும்ப நலனுக்காக ரூபாய் 18.38 கோடியை அள்ளி வழங்கி கொங்கு மண்டலத்தைக் காப்பாற்றிய கருணை தெய்வமே,  வள்ளல்களுக்கெல்லாம் வள்ளலாகத் திகழும் உங்கள் வரலாறு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.இனி என்றைக்கும் தமிழக நிரந்தர முதல்வர் ஜெயலலிதா என்று புகழாரம் சூட்டினார்.
	 
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
| கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்  1 year 1 month ago | வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்  1 year 1 month ago | மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.  1 year 2 months ago | 
-   
          2-வது டி-20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா31 Oct 2025மெல்போர்ன் : 2-வது டி-20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 
-   
          கோர்ட்டு உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை: மதுரை ஐகோர்ட்31 Oct 2025மதுரை, கோர்ட்டு உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை என்று மதுரை ஐகோர்ட்டு கிளை தெரிவித்துள்ளது. 
-   
          சென்னை-குருவாயூர் உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம்31 Oct 2025சென்னை, சென்னை - குருவாயூர் உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம் செய்யப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
-   
          பா.ம.க. உட்கட்சி பிரச்சினை: 6 மாதங்களில் சுமுக தீர்வு; அன்புமணி உறுதி31 Oct 2025சேலம் : பா.ம.க. உட்கட்சி பிரச்சினைக்கு 6 மாதத்தில் சுமுக தீர்வு ஏற்படும் என்று அன்புமணி= கூறினார். 
-   
          இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து31 Oct 2025தமிழ்நாட்டின் 35 ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ள ஏ.ஆர். இளம்பரிதிக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
-   
          ஜாய் கிரிசில்டாவிற்கு ஆண் குழந்தை31 Oct 2025சென்னை : திருமண புகார் வழக்கு நடந்துவரக்கூடியநிலையில், ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 
-   
          ஈரோடு-செங்கோட்டை விரைவு ரயில் இயக்கம் பகுதியளவு ரத்து31 Oct 2025சென்னை : ஈரோடு - செங்கோட்டை விரைவு ரயில் இயக்கம் பகுதியளவு ரத்து செய்யப்பட்டது. 
-   
          ரூ. 1.86 லட்சத்திற்கு ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த ஐ.டி.ஊழியருக்கு அதிர்ச்சி31 Oct 2025பெங்களூரு : ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த ஐ.டி.ஊழியருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 
-   
          சின்னக்காளி பாளையத்தில் குப்பைமேடு: தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை31 Oct 2025சென்னை : சின்னக்காளி பாளையத்தில் குப்பைமேடு அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். 
-   
          கோவையில் அமையும் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு31 Oct 2025கோவை : கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரியது தமிழக அரசு. 
-   
          இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல்: 2 பேர் கைது31 Oct 2025தூத்துக்குடி : இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் செய்து 2 பேரை போலீசார் கைது செய்தனர். 
-   
          இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 31-10-2025.31 Oct 2025
-   
          பிரதமர் மோடி பொய் பிரசாரம்: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு31 Oct 2025சென்னை : பீகாரிகள் பிரதமர் மோடி பொய் பிரசாரம் செய்வதாக தெரிவித்த ஆர்.எஸ்.பாரதி, மோடி, அமித்ஷா ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் பொய் சொல்வதில் வல்லவர்கள் என்றும் அவர 
-   
          வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு31 Oct 2025சென்னை : வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
-   
          முழு காஷ்மீரும் இந்தியாவுடன் ஒருங்கிணைவதை நேரு அனுமதிக்கவில்லை: பிரதமர் மோடி பேச்சு31 Oct 2025அகமதாபாத் : முழு காஷ்மீரையும் இந்தியாவுடன் ஒருங்கிணைக்க விரும்பினார் படேல், ஆனால் நேரு அனுமதிக்கவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 
-   
          பிரதமர் மோடி தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் : தமிழக காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தல்31 Oct 2025சென்னை : பிரதமர் மோடி தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்யின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை, தேர்தல் நன்மைக்காக ஒரு மாநில மக்க 
-   
          அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான் - செங்கோட்டையன்31 Oct 2025கமுதி : அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான் என்று செங்கோட்டையன் தெரிவித்தார். 
-   
          த.வெ.க. கூட்ட நெரிசல் விவகாரம்: சம்பவத்தை பார்த்தவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை31 Oct 2025கரூர் : கரூர் வேலுசாமிபுரத்தில் த.வெ.க. பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த இடத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். 
-   
          ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தடை செய்யப்பட வேண்டும்: கார்கே31 Oct 2025புதுடெல்லி : ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 
-   
          தமிழகத்தில் பீகார் மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை : வி.சி.க. தலைவர் திருமாவளவன்31 Oct 2025சென்னை : பீகார் மக்களுக்கு தமிழகத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்று திருமாவளவன் கூறினார். 
-   
          டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு ஆர்.பி.உதயகுமார் பதில்31 Oct 2025மதுரை : டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு ஆர்.பி.உதயகுமார் பதில் அளித்துள்ளார். 
-   
          ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ஸ்கோரை சேஸிங் செய்த அணி : இந்திய மகளிர் அணி சாதனை31 Oct 2025மும்பை : ஒருநாள் போட்டிகளில் இதுவரையிலான அதிகபட்சமாக துரத்திப் பிடிக்கப்பட்ட இலக்காக இருந்தது. 
-   
          கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகளை முடக்கிய கோர்ட்டு உத்தரவு அமலாக்கத்துறை நடவடிக்கை31 Oct 2025புதுடெல்லி, கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. 
-   
          இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா, கார்கே, ராகுல் அஞ்சலி31 Oct 2025புதுடெல்லி : இந்திரா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு நினைவிடத்தில் சோனியா, கார்கே, ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினர். 
-   
          கட்டணமில்லா பேருந்து பயண அட்டை மூலம் டிச. 31-ம் தேதி வரை பயணிக்க போக்குவரத்து கழகம் அனுமதி31 Oct 2025சென்னை : கட்டணமில்லா பேருந்து பயண அட்டை மூலம் டிசம்பர் 31-ம் தேதி வரை பயணிக்கலாம் என்று போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. 

























































