எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,ஆக.19 - மழைநீர் சேமிப்பு திட்டத்தை அமுல்படுத்தாவிட்டால் கட்டிடம் கட்ட அனுமதியில்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். நேற்று சட்டபேரவையில் உள்ளாட்சித்துறை மானிய கோரிக்கைக்கு பதிலளித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி. முனிசாமி பேசிக்கொண்டு இருந்தார். அப்போது மழைநீர் சேமிப்பு திட்டத்தை செயல்படுத்தாவிட்டால் கட்டிடம் கட்ட அனுமதி தரமுடியாத சூழ்நிலை ஏற்படும் என்றார். உடனடியாக முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டு பேசினார். அப்போது கூறியதாவது: மழைநீர் சேமிப்பு திட்டத்தை பற்றி அமைச்சர் குறிப்பிட்டார். 2011-2006 ம் ஆண்டு அதிமுக ஆட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது புதிய கட்டிடம் கட்டும்போது மழைநீர் சேமிப்பு தொட்டி இருக்கவேண்டும் .அப்போது தான் கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.
2006- ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் இந்த மழைநீர் சேகரிப்பு திட்டத்தை கைவிட்டு விட்டனர். இனிமேல் கட்டிடம் கட்டும் போது மழைநீர் சேமிப்பு தொட்டியின் வரை படம், அந்த கட்டிடம் கட்டும் வரைபடத்தில் காட்டவேண்டும். மழைநீர் வரைபடம் இல்லாத புதிய கட்டிடங்களுக்கு கட்டிட அனுமதி வழங்கப்படாது என்று அரசாணையும் பிறப்பிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


