எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி,மார்ச்.- 5 - பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை வருகிற 25 ம் தேதிக்குள் முடிக்க பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த கூட்டத் தொடர் ஏப்ரல் 21 ம் தேதி முடிவதாக இருந்தது. ஆனால் அதற்கு முன்பே சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு கூட்டத் தொடர் முடிக்கப்படுகிறது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த பிப்ரவரி மாதம் 21 ம் தேதி ஆரம்பமானது. முதல் நாளன்று இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி பிரதீபா உரை நிகழ்த்தினார். பின்னர் 25 ம் தேதி ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியும், 28 ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் தாக்கல் செய்தனர்.
இந்த கூட்டத் தொடர் ஏப்ரல் 21 ம் தேதி வரை நடப்பதாக இருந்தது. அதாவது முதல் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் இம்மாதம் 16 ம் தேதி முடிவதாகவும், 2 வது கட்ட கூட்ட தொடர் ஏப்ரல் 4 ல் தொடங்கி ஏப்ரல் 21 ல் முடிவதாகவும் இருந்தது. இந்த நிலையில்தான் அசாம், மேற்குவங்கம், தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரள மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதிகள் தேர்தல் கமிஷனால் முறைப்படி அறிவிக்கப்பட்டன.
இந்த தேர்தல்கள் ஏப்ரல் 4 ல் தொடங்கி மே 10 ம் தேதி முடிவுக்கு வருகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 13 ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநில வாக்கு எண்ணிக்கையும் மே 13 ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல்கள் ஏப்ரலில் தொடங்கி மே மாதம் வரை நடப்பதால் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முன்கூட்டியே முடிக்க திட்டமிடப்பட்டது.
அதன்படி வரும் 25 ம் தேதிக்குள் பட்ஜெட் கூட்டத் தொடரை முடிக்க பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு பரிந்துரை செய்துள்ளது. முன்னதாக, இந்த குழுவின் கூட்டம் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் நடந்தது. அப்போது 5 மாநில சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பட்ஜெட் கூட்டத் தொடரை சுருக்குவது என்று மத்திய அமைச்சரவை குழு முடிவெடுத்து பரிந்துரை செய்துள்ளது. மத்திய அமைச்சரவை குழுவின் இந்த பரிந்துரை பாராளுமன்ற அலுவல் ஆய்வு குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். அரசின் ஒட்டுமொத்த நிதி தொடர்பான அலுவல்களும் வரும் 25 ம் தேதிக்குள் முடித்து வைக்கப்படும் என்று பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


