முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விரைவில் வருகிறது 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டு

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2011      வர்த்தகம்
Image Unavailable

 

புதுடெல்லி,ஆக.28 - விரைவில் வருகிறது 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கள்ள நோட்டுகளின் புழக்கத்தை தடுக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக தற்போதைய காகிதத்துக்கு பதிலாக பாலிமரால் ஆன ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க முடிவு செய்துள்ளது. இந்த பாலிமர் (பிளாஸ்டிக்) ரூபாய் நோட்கள் முதலில் ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து நியூசிலாந்து, நியூசிரியா, ருமேனியா, பர்முடா, புருனே, வியட்நாம் ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது இந்தியாவிலும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு அறிமுகமாக உள்ளது. முதல் கட்டமாக சோதனை பிளாஸ்டிக் நோட்டு அச்சடிக்கப்பட உள்ளது. மொத்தம் 100 கோடி மதிப்புக்கு 10 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படும் என்றும் சோதனை ரீதியாக நாட்டின் 5 நகரங்களில் புழக்கத்தில் விடப்படும் என்று மத்திய அமைச்சர் நமோநாராயணன் மீனா பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதன் மூலம் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் வருவது தடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். 10- ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகள் அச்சிடுவதற்காக கடந்த 2009 -ம் ஆண்டு சர்வதேச அளவில் டெண்டர்கள் கோரப்பட்டன என்றும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளுக்கு கிடைக்கு வரவேற்பை பொறுத்து இத்தகையை நோட்டுகள் முற்றிலும் அச்சடிப்பது குறித்து முடிவு செய்யப்படும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago