முக்கிய செய்திகள்

அவசர நிலையை ஓராண்டு நீட்டித்து ஒபாமா உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 11 செப்டம்பர் 2011      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,செப்.11 - தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற சூழ்நிலை இருப்பதால் அமெரிக்காவில் தற்போது இருந்து அமலில் இருந்து வரும் தேசிய எமர்ஜென்சி நிலையை மேலும் ஓராண்டு நீட்டித்து அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா உத்தரவு பிறப்பித்துள்ளார்.  கடந்த 2001 ம் ஆண்டு செப்டம்பர் 14 முதல் அமெரிக்காவில் எமர்ஜென்சி அமலில் இருந்து வருகிறது. சர்வதேச பயங்கரவாதி பின்லேடன் கொல்லப்பட்ட நிலையிலும் கூட தீவிரவாத அச்சுறுத்தல் அங்கு தொடர்ந்து நீடிப்பதால் எமர்ஜென்சி மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை பாரக் ஒபாமா ஒரு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இரட்டை கோபுரம், ராணுவ தலைமையகம் ஆகியவற்றை பின்லேடன் தலைமையிலான அல்கொய்தா இயக்கம் தாக்கியதில் அங்கு 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு பலியானது நினைவிருக்கலாம். அது முதல் பயங்கரவாதிகளை ஒழிப்பதில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்புதான் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டான். அப்படியிருந்தும் கூட அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் நீடிக்கிறது. அதன் காரணமாகவே அவசர நிலையும் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: