முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. சட்டமன்ற தேர்தலில் சோனியா பிரசாரம் இல்லை

வெள்ளிக்கிழமை, 7 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி. அக்.7 - உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரச்சாரம் செய்ய மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் தற்போது முதல்வர் மாயாவதி தலைமையில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்திற்கு  அடுத்த ஆண்டு சட்ட மன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் இப்போதே தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தை  காங்கிரஸ் கட்சி இப்போதே துவக்கி விட்டது.

என்றாலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்த தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய மாட்டார் என்று கருதப்படுகிறது. 

சமீபத்தில் சோனியா காந்தி அமெரிக்காவில் ஆபரேஷன் செய்து கொண்டு டெல்லி திரும்பியிருக்கிறார்.

அவருக்கு பூரண ஓய்வு தேவை என்பதால் உ.பி.  தேர்தலில் பிரச்சாரம் செய்ய மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு அவரை தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைப்பதில்லை என்ற முடிவுக்கு உ.பி.  காங்கிரஸ் வந்து விட்டதாக தெரிகிறது.

என்றாலும் உ.பி. தேர்தலில் சோனியாவின் மகனும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான ராகுல் காந்தி தீவிர பிரச்சாரத்தை செய்வார் என்று உ.பி. காங்கிரஸ் கூறியுள்ளன.

உத்தர பிரதேசத்தில் இந்த முறை எப்படியாவது காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை கொண்டு வந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் காங்கிரஸ் கட்சி வேலை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago