கூடங்குளத்தில் அடுத்த மாதம் முதல் உற்பத்தி துவக்கம்

புதன்கிழமை, 19 அக்டோபர் 2011      வர்த்தகம்
Image Unavailable

 

புதுடெல்லி, அக்.19 - கூடங்குளம் அணுமின் நிலையம் அடுத்தமாதம் உற்பத்தியை துவக்கும் என்று அணுசக்தி கமிஷன் தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி தெரிவித்தார். கூடங்குளம் மின்நிலையப்பணிகளை நிறுத்தக்கோரி உள்ளூர் மக்கள் போராடிவரும் நிலையில் இந்திய அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு குறித்து அணுசக்தி கமிஷன் தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

கூடங்குளம் அணுமின் நிலையத்தில், ஜப்பான் அணுமின் நிலையத்தில் நடந்தது போல கதிர்வீச்சு பரவுவதற்கு வாய்ப்பு இல்லை. கூடங்குளம் பகுதி மக்கள் இதனை சரிவர புரிந்துகொள்ளவில்லை. இதனை பயன்படுத்தி சில தரப்பினர் தவறான தகவலை பரப்பிவிட்டனர். எனவே மக்கள் நிலைமையை நன்கு புரிந்து கொள்ளவேண்டும். மக்கள் மத்தியில் சரியான தகவலை எடுத்துக்கூற அணுசக்தி கமிஷன் தவறிவிட்டது. என்பதை ஒப்புக்கொள்கிறேன். செப்டம்பர்- அக்டோபரில் கூடங்குளம் நிலையத்தில் அணுமின் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டிருந்தோம். போராட்டம் காரணமாக தாமதமாகிவிட்டது. எனினும் நவம்பர் இறுதியில் அங்கு உற்பத்தி தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார். போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இது சாத்யமா என்று கேட்டதற்கு எனக்கு நம்பிக்கையுள்ளது. அங்கு நடைபெறும் பணிகளை நிறுத்த இயலாது என்றார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: