முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உறுப்பினர் தேர்தலில் சுப.தங்கவேலன் மகன் படுதோல்வி

ஞாயிற்றுக்கிழமை, 23 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

ராமநாதபுரம் அக.23 ராமநாதபரம் மாவட்டத்தில் நடந்த மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தலில் மொத்தமுள்ள 17 வார்டுகளில் 15 ஐ அஇஅதிமுக கைப்பற்றியது. முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் மகன் சம்பத் படுதோல்வியடைந்தார். அஇஅதிமுக முன்னாள் மாவட்ட கழக செயலாளர்கள் கே.சி.ஆனிமுத்து, சந்தரபாண்டியன் ஆகியோர் உட்பட அக்கட்சியை சேர்ந்த 15 பேர் வெற்றி பெற்றுள்ளனர்

          ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சியில் 17 வார்டுகள் உள்ளன. 1 வது வார்டில் அஇஅதிமுக வேட்பாளர் ஆனிமுத்து 16591 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2 வது வார்டில் அஇஅதிமுக வேட்பாளர் ஆனந்தவள்ளி 14034 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 3 வது வார்டில் அஇஅதிமுக வேட்பாளர் நதியா 20871 வாக்குகள் பெற்று வெற்றி  பெற்றார். 4 வது வார்டில் திமுக வேட்பாளர் மணிமுதாதரசி 16089 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 5 வர் வார்டில் அஇஅதிமுக வேட்பாளர் ஒலிமுகம்மது 11918 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 6 வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் ரவிச்சந்திர ராமவன்னி 10899 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 7 வது வார்டில் அஇஅதிமுக வேட்பாளர் ராஜேந்திரன் 10176 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 8 வது வார்டில் அஇஅதிமுக வேட்பாளர் சரஸ்வதி 7446 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

              9 வது வார்டில் அஇஅதிமுக வேட்பாளர் ரஜினிகாந்த் 12914 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் மகன் சுப.த.சம்பத்தை வெற்றி பெற்றுள்ளார். 16 வது வார்டில் அஇஅதிமுக வேட்பாளர் சுந்தரபாண்டியன் 18096 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மாவட்ட ஊராட்சி தலைவராக அஇஅதிமுகவை சேர்ந்தவரே தேர்ந்தெடுக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!