முக்கிய செய்திகள்

படம் தோல்வி அடைந்தால் நான் ஓடிஒளிவது இல்லை-விஜய் பேட்டி

Image Unavailable

 

சென்னை, அக்.- 30 - படம் தோல்வி அடைந்தால் ஓடி ஒளிவது இல்லை என்கிறார் நடிகர் விஜய்.நடிகர் விஜய்யின் `வேலாயுதம்' படம் தீபாவளிக்கு ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது.  இதுகுறித்து நடிகர் விஜய் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நான் நடிச்ச 52 படங்களை விட `வேலாயுதம்' பெரிய ஹிட்டாகியுள்ளது என்கின்றனர். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இப்படியொரு அருமையான படம் கொடுத்த இயக்குனர் ராஜாவுக்கு நன்றி. தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக அவர் வருவார். ஜெயம்ரவியும் இந்த படத்தின் கதை விவாதத்தில் பங்கேற்றார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் படத்துக்கு தேவையான எல்லாத்தையும் செஞ்சு கொடுத்தார். விஜய் ஆண்டனி ரீ ரிக்கார்டிங் படத்துக்கு பெரிய பலம். படத்துக்கு பிரிண்ட்கள் அதிகம் போடுறாங்க, தியேட்டர்கள் எண்ணிக்கையும் கூட்டுறாங்க. இது படம் ஹிட்டானதற்கு அறிகுறி. எம்.ஜி.ஆர். பார்முலா படத்தில் உள்ளது என்கின்றனர். எம்.ஜி.ஆர். பார்முலாவில் படம் பண்ண எல்லோரும் ஆசைப்படுவர். அது தவறு அல்ல. எம்.ஜி.ஆர். பாணியில் நடிக்க நல்ல கதை அமையணும். அது `வேலாயுதம்' படத்தில் இருக்கு. கிளைமாக்சில் கூட்டத்தினர் பிடித்து வரும் கொடிகள் எனது மக்கள் இயக்க கொடி அல்ல. அடுத்து நண்பன் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும். இண்டர்நெட்டில் வேலாயுதம் படம் வந்ததாக தகவல் வந்தது. அதை தடுக்க எனது இண்டர்நெட் ரசிகர்கள் முயற்சி எடுத்துள்ளனர். புதுப்படங்களை இது போல் இண்டர்நெட்டில் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நான் ஒரே பாணியில் நடிப்பதாக சொல்வது தவறு. `காவலன்' படத்தில் என் பாணி இல்லை. சித்திக் வேறு மாதிரி அப்படத்தை எடுத்தார். அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வரும். வெற்ஹி தோல்வி சகஜம் தான், வெற்றி பெற்றால் சந்தோஷம் தான், தோல்வி அடைந்தால் நான் ஓடி ஒளிவது இல்லை. அந்த நேரத்தில் நான் பேசினால் சரியாக இருக்காது என்றார் விஜய்.

இதை ஷேர் செய்திடுங்கள்: