முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அமைச்சரவையில் 6 புதிய அமைச்சர்கள் நியமனம்

சனிக்கிழமை, 5 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, நவ.5 - தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. 6 புதிய அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.6 அமைச்சர்கள் மந்திரிசபையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் சில அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையின்பேரில் கவர்னர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கடந்த மே மாதம் 16-ந் தேதி அ.தி.மு.க. அரசு பதவி ஏற்றது. அப்போது 33 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். அதன் பிறகு சில அமைச்சர்கள் அவ்வப்போது மாற்றப்பட்டனர்.  இந்நிலையில் தற்போதும் தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சரவையிலிருந்து அமைச்சர்கள் சி.சண்முகவேலு, ஆர்.பி.உதயகுமார், எஸ்.பி.சண்முகநாதன், என்.ஆர்.சிவபதி, ஜி.செந்தமிழன், புத்திசந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். 

மேலும் அமைச்சரவையில் புதிதாக கிணத்துக்கடவு சி.தாமோதரன், திருவாரூர் மாவட்ட செயலாளரும், நன்னிலம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆர்.காமராஜ், டாக்டர் எஸ்.சுந்தர்ராஜ், திருச்சி பரஞ்ஜோதி, மாதவரம் வீ.மூர்த்தி, சிவகாசி தொகுதி எம்.எல்.ஏ. கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பரஞ்ஜோதி சமீபத்தில் நடைபெற்ற திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் அமோக வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு வெற்றிபெற்ற சில நாட்களிலேயே ஜாக்பாட் பரிசாக அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.

இலாகா மாற்றம்

  

மேலும் சில அமைச்சர்கள் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளன. வேளாண்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகவும், டி.கே.எம்.சின்னைய்யா கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராகவும், பி.வி.ரமணா சுற்றுச்சூழல்துறை அமைச்சராகவும், செல்வி ராமஜெயம் சமூக நலத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் தாமோதரனுக்கு வேளாண்மைத்துறையும், ஆர்.காமராஜிக்கு உணவுத்துறையும், டாக்டர் எஸ்.சுந்தர்ராஜிக்கு கைத்தறி மற்றும் ஜவுளித்துறையும், எம்.பரஞ்ஜோதிக்கு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சட்டம் மற்றும் சிறைத்துறையும், மாதவரம் வீ.மூர்த்திக்கு பால் வளமும், கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை இலாகாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவல் தமிழக கவர்னர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago