முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோயில் மலையப்ப சுவாமிக்கு புஷ்ப யாகம்

சனிக்கிழமை, 5 நவம்பர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

தருமபுரி, நவ. 5 - திருமலை திருப்பதி கோயிலில்  மலையப்ப சுவாமிக்கு புஷ்பயாகம் நடைபெற்றது. ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை மாதம் சிராவண நட்சத்திரத்தில் மலையப்ப சுவாமிக்கு மலர்களை கொண்டு யாகம் நடத்தப்படும். இதன்படி கோயில் மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு புஷ்பயாகம் நடத்தப்பட்டது. முன்னதாக சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. 

இதைத் தொடர்ந்து தேவஸ்தானத்துக்கு சொந்தமான தோட்டத்தில் பூத்த சாமந்தி, லில்லி, ரோஜா, நத்திவர்தானம், துளசி உள்ளிட்ட 18 வகை மலர்கள் யாகத்துக்காக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. இதையடுத்து கோயிலின் பிரதான அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் ஓத உற்சவ மூர்த்திகளுக்கு மலர் யாகம் நடத்தப்பட்டது. சுமார் 7 டன் மலர்கள் இதற்கு பயன்படுத்தப்பட்டன. 

நிகழ்ச்சியில் ஆந்திர அமைச்சர் லட்சுமிநாராயணா, தேவஸ்தான தலைவர் பாபிராஜூ, செயல் அலுவலர் சுப்பிரமணியம், இணை செயல் அலுவலர்கள் சீனிவாச ராஜூ, வெங்கட்ராமரெட்டி, திருப்பதி மக்களவை உறுப்பினர் சித்தாமோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புஷ்ப யாகத்தையொட்டி கட்டண சேவையான திருப்பாவாடை, கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை, வசந்த உற்சவம் ஆகிய கட்டண சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago