முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீன பிரதமருடன் மன்மோகன் சிங் சந்திப்பு

சனிக்கிழமை, 19 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

பாலி, நவ.19 - சீன பிரதமர் வென்ஜியாபாவோவை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து முக்கிய பேச்சு நடத்தினார். இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆசியான் அமைப்பைச் சேர்ந்த நாடுகளின் தலைவர்களும், சிறப்பு அழைப்பாளர் நாடுகளின் தலைவர்களும் குவிந்துள்ளனர். இந்த உச்சி மாநாட்டின் ஒரு புற நிகழ்வாக நேற்று சீன பிரதமர் வென்ஜியாபாவோவை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேசினார். பரஸ்பர பலன்களுக்காக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஒத்துழைப்பு நல்குவதற்கு போதுமான துறைகள் உள்ளன என்றும், இந்த துறைகளில் இரு நாடுகளும் ஒன்று சேர்ந்து செயல்படும் என்றும் இரு தலைவர்களும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.  சீனாவுடன் சிறந்த நட்புறவை வளர்த்துக்கொள்ளவே இந்தியா விரும்புகிறது என்று மன்மோகன் சிங் கூறினார். 21 ம் நூற்றாண்டு ஆசியாவின் வசம் என்பதை உறுதி செய்யும் வகையில் இரு நாடுகளும் ஒன்றுடன் ஒன்று கைகோர்த்துக்கொண்டு செயல்பட வேண்டும் என்று வென்ஜியாபாவோ குறிப்பிட்டார். நம் இரு தேசங்களும் அண்டை நாடுகள். அதுமட்டுமல்ல, ஆசியாவில் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் மிகப்பெரிய நாடுகள் நம்நாடுகள்தான். எனவே நம்மிரு நாடுகளும் இருதரப்பு மற்றும் சர்வதேச விஷயங்களில் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் வென்ஜியாபோ தெரிவித்தார். 

பருவநிலை மாற்றம் தொடர்பாக எந்தெந்த துறைகளில் எல்லாம் இந்தியாவும் சீனாவும் ஒன்றுசேர்ந்து செயல்பட்டதோ அந்த துறைகளில் எல்லாம் உலக அளவில் சாதகமான பலன்களையே பெற்றுள்ளன என்று மன்மோகன் சிங் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago