முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறையில் படுக்கை, தலையணை கோரிய நடிகர் தர்ஷன் மனு மீது 29-ந் தேதி தீர்ப்பு

ஞாயிற்றுக்கிழமை, 26 அக்டோபர் 2025      இந்தியா
Darshan 2025-08-20

Source: provided

பெங்களூரு : சிறையில் படுக்கை, தலையணை கோரிய நடிகர் தர்ஷன் மனு மீது 29-ந் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தர்ஷன். இவர், சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி என்பவரை கொலை செய்த வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் தனக்கு படுக்கை, தலையணை வழங்க கோரி பெங்களூரு சிட்டிசிவில் கோர்ட்டில் நடிகர் தர்ஷன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

அந்த மனு மீது விசாரணை நடத்திய கோர்ட், கர்நாடக சட்ட சேவை ஆணையம் சிறைக்குள் சென்று தர்ஷனுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல செய்ய உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, சட்ட சேவை ஆணையமும் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

இதையடுத்து, தர்ஷன் தாக்கல் செய்த மனு மீது சிட்டிசிவில் கோர்ட்டில் இறுதி கட்ட விசாரணை நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றிருப்பதாக நீதிபதி அறிவித்தார். மேலும் தர்ஷனுக்கு தலையணை, படுக்கை வழங்குவது குறித்து வருகிற 29-ந் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று கூறி, அன்றைய தினத்திற்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து