எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கரூர் : கரூர் சம்பவம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று சென்னையில் த.வெ.க. தலைவர் விஜய் சந்திக்கிறார்.
கரூரில் கடந்த மாதம் 27-ம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் விஜய் அறிவித்தார். அதன்படி, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் ‘வீடியோ கால்’ மூலம் பேசி ஆறுதல் தெரிவித்த விஜய், விரைவில் தங்களை நேரில் சந்திக்கிறேன் என உறுதி அளித்தார். அதன்படி, கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க விஜய் முடிவு செய்தார். இதற்காக கரூரில் உள்ள ஏதேனும் ஒரு திருமண மண்டபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை விஜய் சந்தித்து பேசும் வகையில் த.வெ.க. சார்பில் தேடும் பணி நடந்தது. மண்டபம் உறுதி செய்யப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் மண்டபத்தின் உரிமையாளர் திடீரென விஜயின் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் திருச்சியில் நிகழ்ச்சியை நடத்த கட்சியினர் முடிவு செய்தனர். ஆனால் அங்கும் நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்தித்து பேசுவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும் சென்னைக்கு வரவழைத்து நேரில் சந்திக்க விஜய் முடிவு செய்தார். அதன்படி, இந்த சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள ‘ஃபோர் பாயிண்ட்ஸ்’ ஓட்டலில் நடைபெற உள்ளது.
உயிரிழந்த 41 பேரில் 31 பேர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்; மீதமுள்ள 10 பேர் திண்டுக்கல், ஈரோடு, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கண்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த த.வெ.க. நிர்வாகிகளுக்கு கட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இவர்களை சென்னைக்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் த.வெ.க. சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவர்களோடு, நெரிசலில் சிக்கி காயம் அடைந்த 110 பேரும் தங்களது குடும்பத்தினருடன் விஜயை சந்திக்க உள்ளனர்.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே அறிவித்தபடி ரூ.20 லட்சம் வழங்கப்பட்ட நிலையில், காயம் அடைந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.2 லட்சம் நிவாரண உதவி இதுவரை வழங்கப்படவில்லை. மாமல்லபுரத்தில் நடைபெறும் நிகழ்வின்போது, காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவியை விஜய் நேரடியாக வழங்குகிறார். பாதிக்கப்பட்ட அனைவரையும் சென்னைக்கு அழைத்து வந்து, மீண்டும் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கும் வரையிலான அனைத்து செலவுகளையும் த.வெ.க. ஏற்றுக்கொண்டுள்ளது.
சென்னை மாமல்லபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களை இன்று (திங்கட்கிழமை) நேரில் சந்திக்கும் வகையில் விஜயின் கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்ததையடுத்து இன்று அதிகாலை முதலே கட்சியின் தொண்டர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் தங்களது கார்களில் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, அவர்களை கரூர் வெண்ணைமலையில் உள்ள ஒரு அரங்கில் தங்க வைத்தனர். பின்னர் அங்கு அவர்களுக்கு உணவு வழங்கிய பின், அங்கிருந்து இரண்டு பஸ்களில் சென்னைக்கு அழைத்து வருகிறார்கள். இன்று இரவுக்குள் அனைவரும் சென்னை வருகை தர உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
தனியார் பல்கலை. திருத்தச் சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் தகவல்
25 Oct 2025சென்னை: 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.
-
சர்வதேச ஒருநாள், டி- 20 கிரிக்கெட்: விராட் கோலி உலக சாதனை
25 Oct 2025சிட்னி: சர்வதேச வெள்ளைப்பந்து (ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள்) கிரிக்கெட்டில் விராட் கோலி இதுவரை 18,443 ரன்கள் குவித்தன் மூலம் வெள்ளைப்பந்து போட்டிகளில் அதிக ரன் குவித்
-
இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்: அதிக ரன், விக்கெட் வீழ்த்திய வீரர்களில் இந்தியா முதலிடம்
25 Oct 2025சிட்னி: இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா - 202 ரன்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார்.
-
டெல்டா மாவட்டங்களில் பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள பயிர் சேதங்கள் குறித்து கணக்கெடுப்பு முடிந்தவுடன் நிவாரணம் வழங்கப்படும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
25 Oct 2025சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர் சேதங்கள் வேளாண் மற்றும் வருவாய் துறை அலுவலர்களால் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
-
ரஷ்யாவின் அனைத்து எண்ணெய் நிறுவனங்கள் மீது தடை விதிக்க அமெரிக்காவுக்கு உக்ரைன் அதிபர் கோரிக்கை
25 Oct 2025ரஷ்யா: ரஷ்யாவின் அனைத்து எண்ணெய் நிறுவனங்கள் மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
-
கரூர் நெரிசல்: மத்திய அரசின் ரூ.2 லட்சம் நிதி பாதிக்கப்பட்டோரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது
25 Oct 2025கரூர்: தமிழக வெற்றி கழகத்தின் தலைவா் விஜய் செப்.27 இல் கரூா் நகரில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 41 போ் பலியானவர்களின் குடும்பத்தி
-
சாதனையை சமன் செய்த ராணா
25 Oct 2025ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3-வது மற்றும் கடைசி போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் நேற்று மோதியது.
-
மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் 45 ஆயிரம் கனஅடியாக குறைப்பு
25 Oct 2025மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 45,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
-
3-வது ஒருநாள் போட்டியில் ரோகித், விராட் கோலி பேட்டிங்கை பார்த்தது மகிழ்ச்சி: கேப்டன் சுப்மன்
25 Oct 2025சிட்னி: கோலி பேட்டிங்கை பார்த்தது மகிழ்ச்சியாக இருந்ததாக கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இந்தியா வெற்றி...
-
ஆதாயத்திற்காக செயல்படாது தி.மு.க.: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
25 Oct 2025காஞ்சிபுரம்: தி.மு.க.
-
ரோகித் - கோலி அபாரம்: கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி
25 Oct 2025சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஓருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
-
பீல்டிங்கின்போது ஸ்ரேயாஸ் காயம்
25 Oct 2025மும்பை: ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை ஸ்ரேயாஸ் ஐயர் பின்னோக்கி ஓடி சென்று அற்புதமாக பிடித்த போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் ஸ்ரேயாஸ் அய்யருக்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-10-2025.
26 Oct 2025 -
8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் ‘மோந்தா' புயல்
26 Oct 2025சென்னை : 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் ‘மோந்தா' புயல், சென்னைக்கு கிழக்கு - தென் கிழக்கு திசையில் 790 கி.மீ தூரத்தில் புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது.
-
கரூர் சம்பவம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று சென்னையில் சந்திக்கிறார் த.வெ.க. தலைவர் விஜய்
26 Oct 2025கரூர் : கரூர் சம்பவம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று சென்னையில் த.வெ.க. தலைவர் விஜய் சந்திக்கிறார்.
-
ஆசியான் உச்சி மாநாடு: மலேசியாவில் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு
26 Oct 2025கோலாலம்பூர் : ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்க மலேசியா சென்ற அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
சிறையில் படுக்கை, தலையணை கோரிய நடிகர் தர்ஷன் மனு மீது 29-ந் தேதி தீர்ப்பு
26 Oct 2025பெங்களூரு : சிறையில் படுக்கை, தலையணை கோரிய நடிகர் தர்ஷன் மனு மீது 29-ந் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் - 4 பேர் பலி
26 Oct 2025கீவ் : உக்ரைன் , ரஷ்யா இடையே நேற்று 1 ஆயிரத்து 340வது நாளாக போர் நீடித்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 4 பேர் பலியானார்கள்.
-
நேரடியாக போர் தொடுப்போம்: ஆப்கானுக்கு பாக். பகிரங்க எச்சரிக்கை
26 Oct 2025லாகூர் : ஆப்கானிஸ்தானுடன் நடந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாவிட்டால் பாகிஸ்தான் வெளிப்படையான போரை தொடங்கும் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச
-
கந்தசஷ்டி சூரசம்ஹார விழா; திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
26 Oct 2025திருச்செந்தூர் : கந்தசஷ்டி சூரசம்ஹார விழாவையொட்டி நெல்லை மற்றும் தாம்பரத்தில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
-
கேரளாவில் நிலச்சரிவு: ஒருவர் பலி
26 Oct 2025திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இடுக்கி மாவட்டம் அடிமலி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.
-
திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா: தங்க தேரில் சுவாமி வீதிஉலா
26 Oct 2025திருச்செந்தூர் : திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று தங்க தேரில் சுவாமி வீதிஉலா நடந்தது.ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம
-
கனடா மீதும் மேலும் 10 சதவீத வரி விதிப்பு : அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
26 Oct 2025வாஷிங்டன் : கனடா மீதும் மேலும் 10 சதவீத வரி விதிப்பு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
'பைசன்' படக்குழுவினருக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு : இயக்குனர் மாரி செல்வராஜ் நன்றி
26 Oct 2025சென்னை : மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
-
திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
26 Oct 2025திருச்செந்தூர் : திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.


