முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜார்க்கண்ட்டில் அதிர்ச்சி சம்பவம்: ரத்தமாற்றம் செய்யப்பட்ட 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி.

ஞாயிற்றுக்கிழமை, 26 அக்டோபர் 2025      இந்தியா
HIV 2023-10-24

Source: provided

ராஞ்சி : ஜார்க்கண்ட்டில் ரத்தமாற்றம் செய்யப்பட்ட 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்ட‌து குறித்து 5 பேர் கொண்ட உயர்மட்ட மருத்துவக்குழு விசாரணை நடத்தி வருகிறது.

நமது நாட்டில் அரசு மருத்துவமனையை நம்பியே ஏழை மக்கள் இருக்கிறார்கள். எந்தவொரு பிரச்சினை என்றாலும் அவர்கள் அரசு மருத்துவமனையையே நாடுகிறார்கள். பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் மக்களுக்குத் தேவையான சிகிச்சை கிடைக்கிறது என்ற போதிலும், சில அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையில் நடக்கும் அலட்சியங்கள் மனித உயிருக்கே உலை வைக்கின்றன.

அப்படியொரு அதிர்ச்சி சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 5 குழந்தைகள் எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மருத்துவமனையில் அவர்களுக்கு ரத்தம் ஏற்றப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்தே குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டுள்ளது.

கைபாசாவில் உள்ள அரசு மருத்துவமனையில் தான் இந்தக் கொடூரம் நடந்துள்ளது. ஏழு வயதான அந்தக் குழந்தைக்கு தலாசீமியா பாதிப்பு இருந்துள்ளது. இதையடுத்து அந்தக் குழந்தைக்கு ரத்தம் ஏற்றப்பட்ட நிலையில், அக்குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டுள்ளது. இப்படி மொத்தம் 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரிக்க ராஞ்சியிலிருந்து 5 பேர் கொண்ட உயர்மட்ட மருத்துவக்குழு விசாரணை நடத்தி வருகிறது.

முதற்கட்ட விசாரணையிலேயே அங்குப் பல அதிர்ச்சி சம்பவங்கள் வெளியாகி உள்ளது. சனிக்கிழமை நடத்திய ஆய்வில், தலாசீமியாவால் பாதிக்கப்பட்ட மேலும் நான்கு குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஒட்டுமொத்தமாக 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு உறுதியானது. இந்தக் குழந்தைகள் அனைவரும் அதே மருத்துவமனையில் தொடர்ந்து ரத்த மாற்றுச் சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து