முக்கிய செய்திகள்

டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு பெரும் சரிவு

ஞாயிற்றுக்கிழமை, 20 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

மும்பை,நவ.20  அன்னியநாட்டு செலாவணிச்சந்தையில் ஒவ்வொரு நாட்டுடைய பணமதிப்பும் அமெரிக்க டாலரை அடிப்படையாகக் கொண்டே மதிப்பிடப்படுகிறது. சென்ற 2008-ம் ஆண்டிலிருந்து தொடங்கிய மந்தத்தால் அமெரிக்கா உட்பட பலவெளிநாடுகளின் வாணிபம் கவலைக்குரியதாகமாறியது.  அப்போதெல்லாம் இந்தியாவின் பணமதிப்பு உயர்ந்த நிலையில் இருந்தது. டாலரின் மதிப்பு சரிந்து வந்ததால் குறைந்த இந்திய ரூபாயைக் கொடுத்து அதிக அளவில் டாலர்களைப் பெற முடிந்தது.   இதனால் கடந்த 2009 -ம் ஆண்டு மார்ச் 17-ம் தேதி அன்று இந்திய ரூபாயின் மதிப்பு எப்போது மில்லாத வகையில் 51.51 ஆக உயர்ந்தது. அமெரிக்க டாலரின் மதிப்பு 42 ரூபாய்க்கு கீழே சென்றது. ஆனால் தற்போது அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியிலிருந்து மீட்சியடைந்து வருகிறது. இதனால் யூரோ மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு கூடி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அதிக பணம்    கொடுத்து டாலரை வாங்கும் நிலை ஏற்பட்டது. கடந்த 17 -ம் தேதி அன்று டாலரின் மதிப்பு இந்திய மதிப்பில் அதிக பட்சமாக 50.91 ஆக இருந்தது. ஒரே நாளில் 51.35 ரூபாய் கொடுத்து ஒரு டாலரை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ரூபாயின் மதிப்பு 44 பைசாவாக குறைந்து விட்டது. அதிக அளவில் சரிந்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்: