முக்கிய செய்திகள்

மறைந்த எம்.பி.க்களுக்கு இரங்கல் ராஜ்ய சபைஒத்திவைப்பு

புதன்கிழமை, 23 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, நவ.- 23 - எதிர்க்கட்சிகளின் கடுமையான அமளிக்கு இடையே ராஜ்ய சபை நேற்று நாள் முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. நேற்று காலை பாராளுமன்றத்தின் ராஜ்ய சபை கூடியதும் ராஜ்ய சபை உறுப்பினர்கள்  ராம் தயாள் முண்டா, சில்வியஸ் கோந்துபான் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ராஜ்ய சபையின் முன்னாள் உறுப்பினர்கள் குலாம் ரசூல் மாத்தோ, பாபு கல்தாத்தே  ஆகியோரின் மறைவுக்கும்  சபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்த இரங்கல் குறிப்புக்களை சபையின் தலைவர் ஹமீது அன்சாரி வாசித்தார். மேலும் பிரபல  பாடகர் பூபன் ஹசாரிக்காவின் மறைவிற்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அப்போது சபையில் பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை  அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, சுகாதார துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்  ஆகியோர்  இருந்தனர். பிறகு  பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி  எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து சபையை நேற்று நாள் முழுவதுமாக  சபை தலைவர் ஹமீது அன்சாரி ஒத்தி வைத்தார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்: