முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது-நிதீஷ்குமார்

வியாழக்கிழமை, 24 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

பாட்னா, நவ.- 24 - விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது என்றும், இந்த விஷயத்தில் மத்திய அரசை பணியவைக்க எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதீஷ்குமார் கேட்டுக்கொண்டுள்ளார். பீகார் முதல்வர் நிதீஷ்குமார் பாட்னாவில் செய்தியாளர்களிடத்தில் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், லைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது என்று குற்றம்சாட்டினார். குறிப்பாக அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அபரிமிதமாக உயர்ந்துவிட்டன. இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு செயல்பட்டு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். விலைவாசி உயர்வு பிரச்சனை குறித்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சனை குறித்து குரல் கொடுப்பதற்கு நிதீஷ்குமார் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண  பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் இந்த வலியுறுத்தல் மிகவும் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் விலைவாசி உயர்வுக்கு எதிராக குரல் கொடுப்பதில் எதிர்க்கட்சிகளுக்கு இடையே நல்ல ஒற்றுமையும், ஒத்துழைப்பும் இருப்பது பாராட்டுக்குரியது என்றும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் லல்லு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி எம்.பி.க்கள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஜால்ரா போட்டு வருகிறார்களே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அமைச்சரவையில் இவரது கட்சி அங்கம் வகிக்கவில்லை என்றாலும்கூட அந்த கூட்டணியில லல்லு கட்சியும் ஒரு அங்கம்தான். அதனால் அவர்கல் ஜால்ரா போடுகிறார்கள் என்று நிதீஷ்குமார் கூறினார். லல்லுவுக்கும் அவரது கட்சிக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு எப்போதுமே மதிப்பும் மரியாதையும் கொடுத்து வருகிறது. லோக்சபையிலும்கூட அவருக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கிண்டலாக தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்