வீடூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு: முதல்வர் உத்தரவு

திங்கட்கிழமை, 12 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.- 12 - விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணையிலிருந்து பாசனத்திற்காக இன்று முதல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், வீடூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடம் இருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று விழுப்புரம் மாவட்டம், வீடூர் அணையில் இருந்து பாசனத்திற்காக 12​12​2011 முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், வீடூர் அணையின் கீழ் உள்ள 3,200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் . இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். 

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்: