முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்ப்பாட்டத்தை தவிர்க்க பிரதமர் ஹெலிகாப்டரில் பயணம்

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

காரைக்குடி,டிச.27 - பிரதமர் மன்மோகன் சிங் காரைக்குடி வருவதை எதிர்த்து தமிழகத்தில்  பல்வேறு கட்சிகள் கறுப்புக்கொடி செய்யவிருந்தனர். அதை தவிர்க்க பிரதமர் ஹெலிகாப்டரில் பயணம் செய்தார்.  காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் கணிதமேதை ராமானுசன் உயர் கணித மையத்தை திறப்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் சம்மதம் தெரிவித்திருந்தார். அதோடு காரைக்குடியை அடுத்த மானகிரியில் தனியார் மருத்துவ நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. முல்லைப்பெரியாறு விவகாரத்தில் மவுனம் சாதிக்கும் பிரதமர் மன்மோகன் சிங் காரைக்குடி வரும்போது பல்வேறு அரசியல் கட்சிகள் கறுப்புக்கொடி காட்ட உள்ளதாக அறிவித்தனர். கடந்த சில மாதங்களில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அமர்சிங் போன்றவர்கள் பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது தாக்கப்பட்டனர். இதனால் அச்சம் அடைந்த மத்திய பாதுகாப்பு படையினர் பிரதமரை திருச்சியில் இருந்து காரைக்குடிக்கும் காரைக்குடியில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மானகிரிக்கும் ஹெலிகாப்டரிலேயே அழைத்து வந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony