முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய பேரிடர் ஆணைய நிபுணர் குழு நிறுத்திவைப்பு

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, டிச.28 - முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதா வற்புறுத்தியதையடுத்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் நிபுணர் குழு அமைப்பதை நிறுத்திவைத்துள்ளது. இது முதல்வர் ஜெயலலிதாவுக்கு கிடைத்த வெற்றி என்று கூறப்படுகிறது.இதுகுறித்து தமிழக அரசு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- முல்லை பெரியாறு அணை அமைந்துள்ள இடத்தில் நிலநடுக்கம் அல்லது வெள்ள ஆபத்து அல்லது இரண்டும் சேர்ந்து ஏற்படக் கூடிய வாய்ப்பு மாதிரிகள் மற்றும் அவ்வாறு ஏற்பட்டால் தேவையான நடவடிக்கைகள் எடுப்பதற்கான அவசரகால நடவடிக்கைகள் திட்டம் ஒன்றை உருவாக்க ஒரு நிபுணர் குழுவை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பாரத பிரதமருக்கு 20.12.2011 அன்று கடிதம் ஒன்றை எழுதினார்.   உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள  அதிகார குழு பல்வேறு ஆய்வுகளை நடத்தியுள்ளது என்றும், மேலும் சில சோதனைகளை நடத்தி வருகிறது என்றும் குறிப்பிட்டு, இக் குழுவின் அறிக்கை வரும் பிப்ரவரி மாதத்தில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும், முல்லை பெரியாறு அணை விவகாரம் உச்சநீதிமன்றத்திலும் அணையின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட உயர் அதிகாரக் குழு முன்பும் நிலுவையில் உள்ள நிலையில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால்  அவசர கால நடவடிக்கை திட்டம் உருவாக்க ஏற்படுத்தப்பட்ட நிபுணர் குழு தேவையற்றது என்றும் எடுத்துக்கூறி அந்த உத்தரவைத் திரும்பப் பெறுமாறு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணயத்திற்கு உத்திரவிடவேண்டும் என்று பாரதப் பிரதமரை அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொண்டார்.   பாரதப் பிரதமரை 25.12.2011 அன்று சென்னையில் சந்தித்து அளித்த கோரிக்கை மனுவிலும் முதலமைச்சர் ஜெயலலிதா இதுப்பற்றி எடுத்துக் கூறியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட அதிகார குழு உச்சநீதிமன்றத்திற்கு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் வரையில் அவசரகால நடவடிக்கை திட்டம் ஒன்றை உருவாக்குவதற்கான நிபுணர் குழு அமைக்கப்படுவதை நிறுத்தி வைத்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தற்பொழுது உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்