முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹசாரே போராட்டத்துக்கு ரஜினி ஆதரவு

புதன்கிழமை, 28 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச. 28 - அன்னா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். இதற்கு அடையாளமாக இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் சார்பில் சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது ஸ்ரீராகவேந்திரா கல்யாண மண்டபத்திலேயே இலவசமாக நடத்திக் கொள்வதற்கு ரஜினிகாந்த் அனுமதி அளித்துள்ளார். 

ஊழலுக்கு எதிராக போராடி வரும் அன்னா ஹசாரே வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி மும்பையில் நேற்று முதல் 3 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொள்ளவிருக்கிறார். இந்த அமைப்பின் சென்னை கிளை சார்பில் 200 க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். அண்மையில் ஹசாரே சென்னை வந்த போது ரஜினிகாந்த் அவருக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago