முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மு.க.அழகிரிக்கு மதுரை கலெக்டர் மீண்டும் சம்மன்

வெள்ளிக்கிழமை, 30 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,டிச.30 - தயா என்ஜினீயரிங் கல்லூரி நில ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பாக மத்தியமந்திரி மு.க.அழகிரி, அவரது மனைவி, மகனுக்கு வரும் 4-ம் தேதி ஆஜராக கலெக்டர் சகாயம் சம்மன் அனுப்பியுள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகில் உள்ள சிவரக்கோட்டை பகுதியில் தயா என்ஜினீயரிங் கல்லூரி கட்டப்பட்டுள்ளது. இந்த கல்லூரி மத்திய ரசாயணம் மற்றும் உரத்துறை மந்திரி மு.க.அழகிரி குடும்பத்தினருக்கு சொந்தமானது. இந்த கல்லூரியின் ஒரு பகுதி அங்குள்ள கண்மாய் மற்றும் நீர்பிடிப்பு கால்வாயை ஆக்கிரமித்து கட்டியிருப்பதாக அந்த பகுதியை சேர்ந்த விவசாய சங்க செயலாளர் ராமலிங்கம் என்பவர் புகார் மனு கொடுத்திருந்தார். 

அந்த மனுவின் மீது விசாரணைக்காக மத்திய மந்திரி மு.க.அழகிரி, அவரது மனைவி காந்தி அழகிரி, மகன் தயாநிதி ஆகியோரை ஆஜர் ஆகும்படி மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் ஏற்கனவே சம்மன் அனுப்பிஇருந்தார். அதை எதிர்த்து மத்திய மந்திரி மு.க.அழகிரி சார்பில் ஐகோர்ட்டில் மனு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி இந்த நோட்டீசில் தேவையற்ற வாசகங்கள் இருப்பதாக கூறி அந்த சம்மனை ரத்து செய்தார். 

இதற்கிடையில் மாவட்ட கலெக்டர் சகாயம் இந்த புகார் தொடர்பான விசாரணைக்கு மு.க.அழகிரி, அவரது மனைவி காந்திஅழகிரி, மகன் தயாநிதிஆகியோரை வரும் 4-ம் தேதி அன்று காலை 11 மணிக்கு நேரில் அல்லது பிரதிநிதி மூலம் ஆஜர் ஆகி விளக்கம் அளிக்கும்படி மீண்டும் சம்மன் அனுப்பியிருக்கிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்