முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் கோயிலில் நாளை ஆருத்ரா தரிசன திருவிழா

சனிக்கிழமை, 7 ஜனவரி 2012      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பரங்குன்றம், ஜன. - 7 - திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன திருவிழா நாளை நடக்கிறது.  கோயிலில் ஆருத்ரா தரிசன திருவிழா கடந்த சில தினங்களுக்கு முன் மாணிக்கவாசகருக்கு காப்புகட்டுடன் தொடங்கி மிக சிறப்பாக நடந்து வருகிறது. திருவிழாவை முன்னிட்டு தினமும் மாணிக்கவாசகர், திருவாட்சி மண்டபத்தை 3 முறை வலம் வந்து எழுந்தருள்வார். அங்கு கோயில் ஓதுவாரால் திருவெம்பாவை பாடப்படுகிறது. இன்று காலை மாணிக்கவாசகர் சப்பரத்தில் எழுந்தருளி கிரிவீதி உலா செல்வார். இரவு 7 மணிக்கு கோயில் முன்பு அமைக்கப்பட்டிருக்கும் ராட்டினத்தில் சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை எழுந்தருளி ராட்டினத் திருவிழா நடைபெறும்.  திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக நாளை அதிகாலை 4.30 மணிக்கு கோயில் மகா மண்டபத்தில் எழுந்தருளி உள்ள மூலவர்கள் நடராஜ மூர்த்தி, சிவகாமி அம்பாளுக்கு பல்வகை திரவிய அபிஷேகங்கள் முடிந்து சாம்பிராணி தைலம் சாத்துப்படியாகும். சர்வ அலங்காரமாகி தீபாராதனை நடைபெறும். அதனை தொடர்ந்து உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் முடிந்து பூ சப்பரத்தில் தனித்தனியாக கிரிவலம் நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago