எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இஸ்லாமாபாத், பிப்.- 4 - வருகிற 13 ம் தேதி நேரில் ஆஜராகும்படி பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஜா கிலானிக்கு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு சம்மன் அனுப்பியிருப்பதை எதிர்த்து அதே சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய கிலானி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி மீதான பழைய ஊழல் வழக்குகளை மீண்டும் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் கிலானி தலைமையிலான அரசு இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அதனால் கிலானி மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக வருகிற 13 ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் கிலானி நேரில் ஆஜராக வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து அதே சுப்ரீம் கோர்ட்டில் கிலானி சார்பில் மேல் முறையீடு செய்யப்படும் என்று கிலானியின் வக்கீல் ஐப்ஜாஸ் அசன் கூறியுள்ளார். இந்த மேல் முறையீட்டு மனு இன்னும் சில தினங்களில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார். மேல் முறையீடு செய்வது என்ற முடிவை ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவர்கள் எடுத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாக எக்ஸ்பிரஸ் டிரிப்யூன் என்ற ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


