கலாநிதி - தயாநிதி மீது அமுலாக்க பிரிவு வழக்கு பதிவு

வியாழக்கிழமை, 9 பெப்ரவரி 2012      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,பிப்.9 ​- ஏர்செல் மற்றும் மேக்சிஸ் நிறுவனங்களிடமிருந்து ரூ.550 கோடியை முறைகேடாக பெற்றதாக குற்றச்சாட்டின் அடிப்படையில் கலாநிதி மாறன் மற்றும் அவரது இளைய சகோதரரும் முன்னாள் மத்திய அமைச்சர் தயாதிநிதி மாறன் மீதும் மத்திய அமுலாக்க பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிவி செய்துள்ளனர்.

ரூ.ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆர்.ராசா,சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் கருணாநிதியின் மகளும் கலைஞர் டி.வி.யின் பங்குதாரருமான கனிமொழி கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார். ஆர்.ராசா பதவியில் இருந்தபோது 9 கம்பெனிகளின் 122, 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை சமீபத்தில் சுப்ரீம்கோர்ட்டு ரத்து செய்து அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்த 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் கடந்த 2004 மற்றும் 2005 ஆண்டில் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், ஏர்செல் தொலைதொடர்பு நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை தனக்கு மிகவும் வேண்டப்பட்ட மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் என்ற நிறுவனத்திற்கு விற்பனை செய்வது தொடர்பாக ஏர்செல் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. ஏர்செல் நிறுவன பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்ததில் ரூ. 550 கோடி தயாநிதி மாறனுக்கும் அவரது சகோதரர் கலாநிதி மாறனுமக்கும் முறைகேடாக கிடைத்துள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் தயாநிதி மாறன், கலாநிதிமாறன் ஆகியோர்களது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மத்திய அமலாக்க பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனைகளை நடத்தினர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் ஏர்செல், மேக்சிஸ் தொலைதொடர்பு நிறுவனங்களிடம் இருந்து ரூ. 550 கோடியை முறைகேடாக பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் இருவர் மீதும் மத்திய அமுலாக்க பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: