எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஜூன்.7 - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் என பெயர் மாற்றம் செய்வது குறித்து மோடி தலைமனையிலான மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியாவின் வட எல்லை மாநிலமான ஜம்மு காஷ்மீரில் ஜம்மு, காஷ்மீர், லடாக் என 3 பிராந்தியங்கள் உள்ளன. இதில் காஷ்மீர் பகுதியில் குறிப்பிட்ட நிலைப்பகுதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த பகுதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என அழைக்கப்படுகிறது. இந்திய வரைப்படங்களில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதி இந்தியா காஷ்மீருடன் இணைந்து அச்சிடப்பட்டிருக்கும். பாகிஸ்தான் நாட்டு வரைப்படத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அவர்கள் நாட்டுடன் இணைந்திருப்பது போல் வரைப்படங்கள் தயாரிக்கப்பட்டிருக்கும். உலக நாடுகள் சிலவற்றிலும் இந்தய வரைப்படம் வெளியிடும் போது இந்த குழப்பம் ஏற்படும். அப்போது இந்தியா தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்படும்.
இந்நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் என பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வளியாகி உள்ளன. ஜம்மு காஷ்மீர் ஒரே மாநிலம் என்பதால் அதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் என மோடி அரசு கருதுகிறது. இதன் மூலம் ஜம்முவில் இருந்து வெளியேற்றப்பட்ட காஷ்மீர் பண்டிகள் பிரச்னையை காஷ்மீர் பிரச்னையுடன் இணைத்து ஜம்மு காஷ்மீர் அணுகுமுறையில் புதிய கொள்கை மாற்றத்தை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பெயரை மாற்றுவதினால் எந்த பலனும் ஏற்பட போவதில்லை என ஆளும் தேசிய மாநாட்டு கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


